Advertisment

சிங்கமா நின்னு சி.எஸ்.கே. ஜெயித்த தருணம்: ஹைலைட் நிகழ்வுகள் இங்கே...

CSK vs DC Qualifier 2 IPL 2019: சென்னை வெற்றி

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK vs DC Live Score, DC vs CSK Squad Live Updates

CSK vs DC Live Score, DC vs CSK Squad Live Updates

Chennai Super Kings vs Delhi Capital Qualifier 2:  ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் மும்பையுடன் மல்லுக்கட்டுவது யார்? என்கிற பரபரப்பான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் ஹைலைட் நிகழ்வுகளை இங்கு காணலாம்.

Advertisment

ஐபிஎல் 2019 தொடரில், நேற்று (மே.10) இரவு 7.30 விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸும் மோதின. இதில், சென்னை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன் மூலமாக 12 முறை நடந்திருக்கும் ஐபிஎல் போட்டிகளில் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற அணி என்கிற மகத்தான சாதனையை சென்னை படைத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சி.எஸ்.கே.

Live Blog

IPL 2019: CSK vs DC



























Highlights

    23:17 (IST)10 May 2019

    மும்பை - சென்னை ஐபிஎல் பைனல்ஸ்

    2010, மும்பை DYP: சிஎஸ்கே 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    2013, கொல்கத்தா: 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

    2015, கொல்கத்தா: 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி

    2019, ஹைதராபாத்: சென்னை vs மும்பை... வெற்றி யாருக்கு?

    23:04 (IST)10 May 2019

    இறுதிப் போட்டியில் சிஎஸ்கே

    19.0 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. 

    இறுதிப் போட்டியில் சென்னை vs மும்பை

    22:56 (IST)10 May 2019

    வெற்றிக்கு 4 ரன்கள்

    சென்னை அணி வெற்றிப் பெற 12 பந்துகளில் 4 ரன்கள் தேவை...

    அப்போ ஜெயிச்சாச்சு-னு சொல்லுங்க!!

    22:46 (IST)10 May 2019

    ரெய்னா அவுட்

    11 ரன்களில் போயும் போயும் அக்ஷர் படேல் ஓவரில் ரெய்னா போல்டாகி வெளியேற, சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள்.

    22:40 (IST)10 May 2019

    115-2

    14 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. 

    களத்தில் ரெய்னா, ராயுடு!!

    ராயுடு ஒன்னும் அடிக்கப் போறது இல்லை, அப்புறம் என்னத்துக்கு இறக்கி விட்டுருக்காய்ங்க!!

    22:34 (IST)10 May 2019

    வாட்சன் 50 & அவுட்

    31 பந்துகளில் அரைசதம் விளாசிய ஷேன் வாட்சன், அமித் மிஸ்ரா ஓவரில் கேட்சாக, எளிதான வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்.

    22:23 (IST)10 May 2019

    டு பிளசிஸ் அவுட்

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிளசிஸ் அரைசதம் அடித்து, தனது பணியை நிறைவாக செய்து, போல்ட் ஓவரில் 50 ரன்களில் கேட்சாக, சிஎஸ்கே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

    22:19 (IST)10 May 2019

    டு பிளசிஸ் அரைசதம்

    கேட்க எவ்வளவு இதமா இருக்குது!! நடப்பு சீசனில் 3வது அரைசதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் டு பிளசிஸ்... 37 பந்துகளில் அரைசதம் அடிக்க, சிஎஸ்கே 10 ஓவர்கள் முடிவில் 81/0.

    22:16 (IST)10 May 2019

    72-0

    9 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது.

    கேட்கவே ஆச்சர்யமா இருக்குல!!!

    22:09 (IST)10 May 2019

    50-0

    ஷப்பாடா.... ஒரு வழியாக சென்னை ஓப்பனர்ஸ் வாட்சன், டு பிளசிஸ் பவர் பிளேயில் அவுட்டாகாமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இதில் டு பிளசிஸ் பங்கு 43 ரன்கள்...

    22:00 (IST)10 May 2019

    வாவ்.. இது ஹாட்ரிக்

    இஷாந்த் ஷர்மா வீசிய 6வது ஓவரில், முதல் 3 பந்துகளை அட்டகாசமாய் டு பிளசிஸ் பவுண்டரிக்கு விளாச, விசாகப்பட்டினம் ஒரு நொடி சேப்பாக் மைதானமாய் தெரிந்தது.

    21:54 (IST)10 May 2019

    கியர் மாற்றும் பிளசிஸ்...

    ஷேன் வாட்சன் வழக்கம் போல், மவுனம் காக்க டு பிளசிஸ் சார்ஜ் எடுத்து அடித்து ஆடி வருகிறார். 

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஓவர்கள் முடிவில், 27-0.

    21:41 (IST)10 May 2019

    சிஎஸ்கே பயப்படுகிறதா?

    ஷேன் வாட்சன் - டு பிளசிஸ் தொடக்க ஜோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம் ஷேன் வாட்சன் சொதப்பல் தான். அவரது தொடர் சொதப்பல், சென்னை ஓப்பனிங்கை குலைத்துவிட்டது.

    சிஎஸ்கே 2 ஓவரில் 4 ரன்கள்...

    21:36 (IST)10 May 2019

    1க்கு 1.... ஓகே தானே!?

    ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன்கள் மட்டும் கிடைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் மிக நிதான ஓப்பனிங்!!

    21:34 (IST)10 May 2019

    சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தில்...

    சென்னை சூப்பர் கிங்ஸ் ஓப்பனர்ஸ்களாக ஷேன் வாட்சன், து பிளசிஸ் களத்தில்...

    யோவ்... வாட்டோ... உன்னை அடின்னு சொல்லல... ஆனா, ஒரு 8 ஓவர் வரைக்குமாவது அங்க நில்லு.

    21:29 (IST)10 May 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    கண்ணாயிரம் - 148 என்பது விசாகப்பட்டினத்தில் ஓரளவு டீசன்ட்டான டார்கெட் தான். ஆனால், கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்கில் ஒரு சதவிகிதம் கூட கான்ஃபிடன்ட் இல்லை...

    இன்றும் அது தொடர்ந்தால் கஷ்டமே!!!

    21:18 (IST)10 May 2019

    148 ரன்கள் இலக்கு

    அடக்கடவுளே... ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டுள்ளது. இதில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி இஷாந்த் ஷர்மா அடித்தது. அதுவும் கடைசி இரு பந்தில்...

    ஜடேஜா.. இதைவிட ஒரு அவமானம் வேணுமா!!!!!?

    21:13 (IST)10 May 2019

    பண்ட் காலி....

    ஒருவழியாக ரிஷப் பண்ட்டை காலி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்... தீபக் சாஹர் ஓவரில் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    21:07 (IST)10 May 2019

    கீமோ பால் அவுட்

    டுவைன் பிராவோ ஓவரில் மெகா சொதப்பல் நிகழ்த்திய கீமோ பால், அவரது ஓவரிலேயே 3 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.

    20:57 (IST)10 May 2019

    தாஹிர் ஓவரில் சாத்து

    ஹிட்மேன் ரிஷப் பண்ட், இம்ரான் தாஹிர் ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸ் விளாச, தோனியின் முகத்தில் அக்னி கங்கு தக தகத்ததை நம்மால் காண முடிந்தது.

    20:52 (IST)10 May 2019

    கமான் பஜ்ஜி...

    ஹர்பஜன் சிங் ஓவரில் ரூதர் ஃபோர்டு 10 ரன்களில் கேட்ச் ஆனார். இது பஜ்ஜியின் 2வது விக்கெட்..

    ஆனால், ரிஷப் பண்ட் இன்னும் களத்தில்...

    20:49 (IST)10 May 2019

    150 அல்லது 160?

    டெல்லி கேபிடல்ஸ் அணி 150 அடிக்குமா 160 அடிக்குமா?

    ஒரு வெங்காயமும் இல்லை... 130- 145 தான்.

    என்ன நேயர்களே?

    20:39 (IST)10 May 2019

    85-5

    14 ஓவர்கள் முடிவில், டெல்லி 85-5.

    உங்கள் ஸ்கோர் பிரடிக்ஷன் என்ன?

    20:33 (IST)10 May 2019

    அக்ஷர் படேல் பட் பட்....

    பிராவோ பந்தில் லைட்டாக ஊப்பர் கட் அடித்த அக்ஷர் படேல் 3 ரன்களில் இம்ரான் தாஹிரிடம் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    தற்போது ஐந்தாவது விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்....

    20:27 (IST)10 May 2019

    அவசரப்பட்டுட்டியே ஐயர்...

    கேப்டனை காலி செய்தது பராசக்தி எக்ஸ்பிரஸ். 

    இம்ரான் தாஹிர் ஓவரில் 13 ரன்களில் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். 

    12 ஓவர்கள் முடிவில் 78-4

    20:20 (IST)10 May 2019

    களத்தில் ஹிட் மேன்

    ஹிட் மேன்-னு சொன்னது நம்ம ரிஷப் பண்ட்டை... மேட்சை ஒற்றை ஆளாக மாற்றும் திறம் படைத்த இளம் வீரர், இந்திய வீரர்...

    ஆனால், தோனி பின்னால் இருக்கும் போது, இவரது அதிரடி அவ்வளவு சீக்கிரத்தில் பேட்டை சுழற்ற முடியாது.

    20:13 (IST)10 May 2019

    மன்ரோ அவுட்

    காலின் மன்ரோ ஸ்பின் பந்தை எதிர்கொள்வதில் தான் இன்னும் ஒரு கத்துக்குட்டி என்பதை நிரூபித்துவிட்டார்.

    ரவீந்திர ஜடேஜா ஓவரில் 27 ரன்களில் ஸ்வீப் ஷாட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    அந்த ஷாட் உண்மையில் தேவையில்லாத ஆணி தான்!

    20:08 (IST)10 May 2019

    ஏழில் ஒரு ஏழரை

    டெல்லி அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போதைய நிலவரம் உண்மையில் டெல்லி சாதகமாக இல்லை. சென்னை பவுலர்ஸ் தங்களது 'ஏ' பிளானில் நன்றாக பவுல் செய்து வருகின்றனர்.

    20:00 (IST)10 May 2019

    தவான் அவுட்...

    அடடே... நம்ம பஜ்ஜி பா எடுத்த விக்கெட் இது. ஷிகர் தவான் 18 ரன்களில் திக் எட்ஜ் ஆக, தோனி கைகளில் பந்து சிக்க, இரண்டாவது விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்

    19:57 (IST)10 May 2019

    டெல்லி ஸ்கோர் பிரடிக்ஷன்

    டெல்லி கேபிடல்ஸ் இன்று 150-165 வரை ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது. 180+ அடிப்பது சிரமம் என்பதே நமது கணிப்பு

    19:52 (IST)10 May 2019

    காலின் மன்ரோ களத்தில்...

    ஒன டவுன் பேட்ஸ்மேனாக அதிரடி வீரர் காலின் மன்ரோ களமிறங்கி உள்ளார். 

    கரணம் தப்பினால் மரணம்..... மன்ரோ-வை நிக்கவிட்டால் சிஎஸ்கே காலி...

    19:48 (IST)10 May 2019

    தோனி ரிவியூ சிஸ்டம்

    தீபக் சாஹர் ஓவரில் ப்ரித்வி பேடில் பந்து பட, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இருப்பினும், தோனி ரிவியூ எடுக்க, பந்து மிடில் ஸ்டெம்பை தாக்க, காக்க காக்க தோனி காக்க...

    19:43 (IST)10 May 2019

    நீ இருக்கும் வரை கவலை இல்லை...

    முதல் ஓவரில் தீபக் சாஹர் 7 ரன்கள் மட்டும் எடுக்க, அடுத்த ஓவரை வீசிய ஷர்துள் தாகூர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் ஷிகர் தவான்.

    ஷர்துள் அவரது பணியை மிகச் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார்.

    19:41 (IST)10 May 2019

    கணிப்பு கண்ணாயிரம்

    அண்ணே... உங்களைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு!! எப்படி இருக்கீங்க? இன்னைக்கு ஜெயிக்கப் போவது யார்?

    கண்ணாயிரம் - நல்லா இருக்கேன் தம்பி. இன்னைக்கு சந்தேகமே வேண்டாம்.. சென்னை தான். தோனியின் அனுபவம் இன்று டெல்லியை வீழ்த்தும்.

    ஆனால், இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்துவது கடினம்.

    19:32 (IST)10 May 2019

    டெல்லி களத்தில்...

    வழக்கம் போல், டெல்லி அணியின் ஓப்பனர்ஸ் ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் களத்தில்...

    யப்பா 170க்கு மேல அடிக்க விட்டுடாதீங்க... அப்புறம் டர்ரு தான்!!

    19:17 (IST)10 May 2019

    சென்னை பிளேயிங் XI

    ஷேன் வாட்சன் (பெயரை கேட்டாலே கோபம் வருது-ல!!)

    டு பிளசிஸ் (எப்போ அடிப்பாருன்னு அவருக்கே தெரியாது)

    சுரேஷ் ரெய்னா (ஃபார்ம் அவுட்டாகி பல ஜென்மங்கள் ஆகுது)

    அம்பதி ராயுடு (அடப் போங்கப்பா)

    எம் எஸ் தோனி (சிஎஸ்கே அணியின் தோணி)

    டுவைன் பிராவோ (நான் ஆல் ரவுண்டர் என்பதை நானே மறந்துட்டேன்)

    ரவீந்திர ஜடேஜா(போன சீசன் 'ஜீரோ'.. இந்த சீசன் 'ஜீ'-னு சொல்ற அளவுக்கு மரியாதை)

    இம்ரான் தாஹிர் (தோனியின் ஜெலுசில்)

    ஹர்பஜன் சிங் (தோனியின் அமுர்தாஞ்சன்)

    தீபக் சாஹர் (தோனியின் அஞ்சால் அலுப்பு மருந்து)

    ஷர்துள் தாகூர் (இந்த மருந்துகளுக்கு செமத்தியாக வேலை கொடுப்பவர்)

    19:02 (IST)10 May 2019

    சென்னை பவுலிங்...

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய்க்கு பதில் ஷர்துள் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    18:53 (IST)10 May 2019

    வாங்கண்ணா, வணக்கங்கண்ணா...

    அனைத்து தோனியன்ஸுக்கும் வணக்கம்... மும்பையிடம் வாங்கிய செமத்தியான அடிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறு வகையில் டெல்லியை தற்போது எதிர்கொள்கிறது.

    Ipl
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment