Advertisment

ஏரோ பார்க், கிரிக்கெட், ஹாக்கி மைதானம்… தாம்பரம் விமானப்படை தளத்தில் பொதுமக்கள் நுழைய அனுமதி!

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளம் அதன் மைதானத்தை பொதுமக்களுக்காக திறக்க உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Tambaram Air Force Station open grounds for public use Tamil News

தாம்பரத்தில் அமைத்துள்ள விமானப்படை தளத்தில் கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானம், ஓடுபாதை மற்றும் பிற வசதிகளை உள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு தளங்களில் உள்ள வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் அமைத்துள்ள விமானப்படை தளத்தில் உள்ள அதன் கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானம், ஓடுபாதை மற்றும் பிற வசதிகளை பொதுமக்களுக்காக திறந்துள்ளது.

Advertisment

வளாகத்தில் உள்ள குளம் அருகே பொதுமக்கள் அமர்ந்து இருக்கும் இடமாக பயன்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த குளம் சமீபத்தில் அமிர்த சரோவராக உருவாக்கப்பட்டு, குளத்தை சுற்றி நடைபாதைகள் மற்றும் இதர வசதிகள் அமைக்கப்பட உள்ளது. சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போர் விமானங்களைக் காட்சிப்படுத்தி ஏரோ பார்க் அமைக்கப்படுகிறது. இலகுரக விமானங்கள், மாதிரி விமானங்கள் மற்றும் அது பயன்பாட்டில் இல்லாத போது ஓடுபாதையில் பறக்கும் பயிற்சியை அனுமதிக்கும் திட்டமும் உள்ளது.

"வசதிகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் குழுக்களைப் பயன்படுத்த அனுமதிக்க அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். பறக்கும் பொழுதுபோக்காக உள்ளவர்கள் எங்கள் ஓடுபாதையில் இருந்து சிறிய அல்லது இலகுரக விமானங்களை இயக்க முடியும். விமானப்படை நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. போர் விமானங்களை இயக்கும் வகையில் ஓடுபாதைகளில் ஒன்று நீட்டிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் சமீபத்தில் வந்து மைதானத்தை சோதனை செய்தனர். நாங்கள் மாநில அரசை அணுகி, விமானப்படை நிலையத்தில் உள்ள வசதிகளை குறிப்பிட்ட அணிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்ய கடிதம் கொடுத்தோம்.

சேவையில் இருந்து விலக்கப்பட்ட போர் விமானங்களைப் பயன்படுத்தி நாங்கள் ஏரோ பூங்காவை உருவாக்கி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே 5 பழைய விமானங்களைக் கொண்டு வந்துள்ளோம். அவை காட்சிக்காக புதுப்பிக்கப்படுகின்றன.

விமானங்களில் எம்ஐ8 ஹெலிகாப்டர், எம்ஐஜி 29, எம்ஐஜி 21 மற்றும் கிரண் ஆகியவை அடங்கும். சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு, பல்வேறு விமானப் படைத் தளங்களில் அமைந்துள்ள மேலும் பல விமானங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்." என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Sports Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment