Advertisment

டி20-ல் இந்திய அணிக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் 'ப்ரடேட்டர்'!

மீண்டும் டி20 அணிக்கு கிறிஸை வரவேற்கிறோம். எங்கள் அணியின் டாப் ஆர்டர் வரிசை நிச்சயம் அவரது வருகையால் பலம் பெறும்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
டி20-ல் இந்திய அணிக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் 'ப்ரடேட்டர்'!

தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி கலக்கி, சொதப்பி வருகிறது எனலாம். முதல் போட்டி, மழையால் பாதிக்கப்பட இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியை இந்திய அணி வென்றது. ஆனால், நான்காவது ஒருநாள் போட்டியில், 190 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. வரலாறு காணாத அளவில் 114 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த தோனி, அணியை வெற்றிப் பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார். அதேசமயம் பலம் வாய்ந்த இந்திய அணியை, கத்துக்குட்டி அணியை வைத்துக் கொண்டு, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வென்றுவிட்டார்.

Advertisment

நாளை (ஜுலை 6) கிங்ஸ்டனில் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதில் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வென்றுவிட்டால், அதன் விளைவு யுவராஜ், தோனி ஆகியோரையே அதிகம் தாக்கும். அணியில் அவர்களது இடம் குறித்த கேள்விகள் மிகத் தீவிரமாக எழுப்பப்படும் என்பது உண்மை.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரேயொரு டி20 போட்டி கிங்ஸ்டன் மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில், பல மாதங்களுக்குப் பிறகு 'அதிரடி மன்னன்' கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 தொடர் தான் கடைசியாக அவர் அணியில் பெற்றிருந்த தொடராகும்.

அவர் அணியில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம், "மீண்டும் டி20 அணிக்கு கிறிஸை வரவேற்கிறோம். எங்கள் அணியின் டாப் ஆர்டர் வரிசை நிச்சயம் அவரது வருகையால் பலம் பெறும். உயர்தரமிக்க இந்திய அணிக்கு எதிராக சொந்த மக்களுக்கு முன்னால் ஆடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அணிக் கலவை சிறப்பாக உள்ளது. இளம் வீரர்களுக்கு தங்களுடைய திறமையை நிரூபிக்க இதுவொரு அருமையான வாய்ப்பு, அதேசமயம் மூத்த வீரர்கள் தங்களது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்" என்றது.

கெயிலை பொறுத்தவரை, டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார். 35.32 சராசரியுடன் மொத்தம் 1519 ரன்கள் குவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி விவரம்: கார்லஸ் ப்ரத்வைட், சாம்யூல் பத்ரி, ரான்ஸ்ஃபோர்ட் பீட்டன், கிறிஸ் கெயில், எவின் லெவிஸ், ஜேசன் முஹம்மது, சுனில் நரேன், கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் பவல், மார்லன் சாம்யூல்ஸ், ஜெரோம் டெய்லர், சாட்விக் வால்டன், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

Chris Gayle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment