இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி கிரிக்கெட் தொடர்பான சில செய்திகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்,
ஹேப்பி பர்த்டே மார்கஸ் டிரெஸ்கோதிக் - 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒரு முகம் மார்கஸ் டிரெஸ்கோதிக். இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க வீரரான டிரெஸ்கோத்திற்கு இன்று (டிச.25) பிறந்தநாள்.
இவர் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 5,825 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 219.
அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களுடன் 4,335 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 137.
ஹேப்பி பர்த்டே அல்ஸ்டர் குக் - இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் வீரருமான குக், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை, இந்திய மண்ணிலேயே வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரரான குக்கிற்கும் இன்று பிறந்தநாள்.
ஹேப்பி பர்த்டே க்ளாரி க்ரிம்மெட் - ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஸ்பின்னரான க்ளாரி 1891-ஆம் ஆண்டு இதே தினம் பிறந்தார். 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள க்ளாரி, 217 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 36-வது டெஸ்ட் போட்டியில் 200-வது விக்கெட்டை கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இன்று வரை இச்சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது.
குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள்:
தனது காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் மிட்செல் ஸ்டார்க்:
3-வது டி20ல் தல தோனியின் மேட்ச் ஃபினிஷிங் மொமன்ட்: