இந்திய அணி கோச் யார் என்பதை இன்றே அறிவிக்க வேண்டும்: நிர்வாகிகள் குழு

விராட் கோலிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அவருடன் ஆலோசனை நடத்தி இன்றே கோச்சை அறிவிக்க வேண்டும்

இந்திய அணியின் தலைமை கோச் யார் என்பதை நேற்று (திங்கள்) அறிவிப்பதாக இருந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் கங்குலி நேற்று அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் இருந்து விராட் கோலி திரும்பியவுடன், புதிய கோச் குறித்து ஆலோசனை நடத்தி பின் அறிவிக்கப்படும். ஏனெனில், நாங்கள் கோச்சை அறிவித்து விட்டால், அவர் தான் உலகக்கோப்பை வரை அணியில் தொடர வேண்டும். இதனால் விராட் வந்தவுடன் கோச் பற்றி அறிவிக்கப்படும்” என்றார்.

ஆனால், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு(COA), இன்றே கோச் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அவருடன் ஆலோசனை நடத்தி இன்றே கோச்சை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனால், இன்று மாலைக்குள் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படுகிறார். ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ஆகியோர் நேற்று கிரிக்கெட் ஆலோசனை குழுவால் நேர்காணல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close