Advertisment

ரேஸ் பிரியர்களுக்கு சூப்பர் விருந்து… கோவையில் தேசிய ராலி சாம்பியன்ஷிப் தொடக்கம்!

கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்யின் 3ம் சுற்று நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore Rally, FMSCI INRC Tamil News

சனி, ஞாயிறு இரு நாட்கள் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது கோயம்புத்தூர் ராலி.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்பின் 3ம் சுற்று ஜூலை 29 (சனி) மற்றும் ஜூலை 30 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ புரோமொடேராக உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று இட்டா நகரிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

publive-image

கோவையில் நடைபெறும் 3ம் சுற்றின் தொடக்க விழா இன்று கோவை ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்-பின் தலைவர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைகின்றனர்.

இந்த 2-நாள் கார் ராலியில் இந்திய முழுவதும் இருந்து மொத்தம் 7 அணிகள் மற்றும் 17 தனி போட்டியாளர்கள் சார்பில் 76 கார்கள் வெவ்வேறு ஐ.என்.ஆர்.சி. (INRC) போட்டி பிரிவுகளில் பங்கேற்கிறது. (ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி. 2., ஐ.என்.ஆர்.சி. 3., ஐ.என்.ஆர்.சி.4., ஜூனியர் ஐ.என்.ஆர்.சி., பெண்கள் பிரிவு மற்றும் ஜிப்சி பிரிவு ) மொத்தம் 6 பிரதான் ரேஸ் பிரிவுகள் இந்த இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்வில் INRC பிரிவின் அர்ஜுன் ராவ், INRC2 பிரிவின் சாகில் கண்ணா,INRC3 பிரிவின் சேஷங் ஜம்வால், INRC4 பிரிவின் அபின் ராய், ஜிப்சீ பிரிவின் சாம்ராட் யாதவ் JINRC பிரிவின் அர்நாவ் பிரதாப், INRC பெண்கள் பிரிவின் ஷிவானி பர்மர் மற்றும் கோவை INRC திறமை போட்டியில் வெற்றி பெற்ற ஹெம் ராஜ் கலந்து கொண்டனர்.

publive-image

முதல் நாள் நிகழ்வுகளுக்கான பந்தய தடம் L&T சாலை அருகே உள்ள SM அக்ரோ வளாகத்திலும் இரண்டாம் நாளுக்கான தடம் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியிலும் நடக்கிறது. போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.6.5 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள், பந்தய பிரியர்கள் இலவசமாக நேரில் பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Coimbatore Car
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment