Advertisment

WTC Final: ஜடேஜா - அஸ்வினுக்கு வாய்ப்பு; வர்ணனையாளர் முத்துவின் பிளேயிங் 11

'டெஸ்ட்ல நாமதான் பெஸ்ட்' என்று குறிப்பிட்ட அவர், இந்திய அணியின் தொடக்க ஜோடியாக கேப்டன் ரோகித் - சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார்.

author-image
Martin Jeyaraj
New Update
cricket commentator pradeep muthu predicted playing XI for IND vs AUS WTC Final 2023 Tamil News

WTC Final 2023 - pradeep muthu’s india team predicted playing XI Tamil News

IND vs AUS WTC Final 2023 Tamil News: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை (புதன்கிழமை) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நியூசிலாந்திடம் பறிகொடுத்த இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

Advertisment

வர்ணனையாளர் முத்துவின் பிளேயிங் 11

இந்நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது ஆடும் லெவன் வீரர்கள் பட்டியலை நம்முடன் பகிர்ந்துள்ளார். 'டெஸ்ட்ல நாமதான் பெஸ்ட்' என்று குறிப்பிட்ட அவர், இந்திய அணியின் தொடக்க ஜோடியாக கேப்டன் ரோகித் - சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார். 3 முதல் 5 இடங்கள் வரை வழக்கம் போல் புஜாரா, கோலி, ரஹானே ஆகியோரை எடுத்துள்ளார்.

இந்த முக்கிய போட்டியில் விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், முத்து 4 போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள கே.எஸ் பாரத்தை தேர்வு செய்துள்ளார். அவரின் வரிசையில் முக்கிய மாற்றங்களாக ஜடேஜாவை 6வது இடத்தில் எடுத்துள்ளார். அதேநேரத்தில் அஸ்வினை 8வது இடத்தில் கொண்டுவந்துள்ளார். இதன்மூலம் அவர் 2 சுழல் மன்னர்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.

publive-image

வேகத்தில் மிரட்ட ஷர்துல், ஷமி, சிராஜ் ஆகியோரை எடுத்துள்ளார். ஷமி நடப்பு ஐ.பி.எல் சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி இருந்தார். 17 போட்டிகளில் விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 'பர்பிள் கேப்'பை வசப்படுத்தி இருந்தார். அவரே இந்த போட்டிக்கான வேகப்பந்து வீச்சு வரிசையை வழிநடத்துவார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் அனுபவமுள்ள 'லார்ட்' தாக்கூர் உள்ளார். அவருடன் இணைந்து தாக்குதல் நடந்த சிராஜ் உள்ளார். ஓவல் ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிராஜ் விக்கெட் வேட்டை நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: வர்ணனையாளர் முத்துவின் பிளேயிங் 11

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, ஜடேஜா, கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஷர்துல், ஷமி, சிராஜ்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket World Test Championship Ravindra Jadeja Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment