Advertisment

கானல் நீராய் போன கனவு… கடைசி வரை உலக கோப்பை இந்திய அணியில் ஆடாத 5 வீரர்கள்!

The 5 Great Indian Cricketers Who Never Played A World Cup Level Match For Multiple Reasons Tamil News: ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை தொடரில், தனது சொந்த நாட்டு அணியில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகவும் இருக்கிறது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket news in tamil; 5 Indian players Never Played a wc Level Match

Ishant Sharma - VVS Laxman - Parthiv Patel

Cricket news in tamil: விளையாட்டு உலகில் முன்னணி விளையாட்டாக கிரிக்கெட் வலம் வருகிறது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த விளையாட்டை ரசிக்கும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனும் கனவு காணும் ஒரு விஷயம், இந்திய அணி உலகக் கோப்பையை உயர்த்துவதைத் தான். அந்த கனவைக் கடந்த காலங்களில் கபில்தேவ் மற்றும் எம்.எஸ். தோனி போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் நிறைவேற்றி வைத்தனர்.

Advertisment

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில், தனது சொந்த நாட்டு அணியில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கிறது. ஆனால் அந்த தனித்துவமான வாய்ப்பை எல்லா கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்துவதில்லை. பல விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய அணிக்காக விளையாடுகின்றனர். ஆனால், அதில் சில வீரர்கள் தான் உலக கோப்பை போன்ற தொடரிகளில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், இதுவரை எந்த உலகக் கோப்பையிலும் விளையாடாத 5 சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இஷாந்த் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியில் வேகத் தாக்குதல் தொடுத்து விக்கெட்டுகள் வீழ்த்துவதில் முன்னணி வீரராக இருந்தவர் இஷாந்த் ஷர்மா. இவரின் துல்லியமான பந்துவீச்சு திறன் மற்றும் பந்துகளை ஸ்விங் செய்யும் திறன்களுக்காக அதிகம் அறியப்பட்டார். இவர் வீசும் பந்துகளை சமாளிக்க பல முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறியுள்ளனர்.

publive-image

அந்த அளவிற்கு தரமான வேகம் காட்டிய இஷாந்த் ஷர்மா, அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், அதிக ரன்களை விட்டுக்கொடுக்க தொடங்கினார். இதனால், அவரை அணியில் இருந்து அடிக்கடி கழற்றி விட்டனர். எனினும், 2015 ஆண்டுக்கான உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் அவரது வாய்ப்பை தட்டிப் பறித்தது. இது அவருக்கு ஏமாற்றத்தையும் அளித்தது.

அதன்பிறகு இஷாந்த் ஷர்மா விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிகம் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இதனால், அவர் அதிக கவனம் பெறவில்லை. அவர் 100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், 115 ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவரால் கடைசி வரை ஒரு உலக கோப்பை தொடரில் கூட விளையாட முடியாமல் போனது.

இர்பான் பதான்

இதுவரை உலகக் கோப்பையில் பங்கேற்காத இந்திய வீரர்கள் பட்டியலில் இர்பான் பதான் இடம்பிடித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியமான விடயமாகும். ஏனென்றால் அவரின் பந்துவீச்சு திறனை பார்த்த அனைவருமே உச்சு கொட்டுவார்கள். அவ்வளவு அசத்தலாக பந்துகளை வீசி மிரட்டுவார். அவரது காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராகவும், மிரட்டல் பந்துவீச்சாளராகவும் இருந்தார். குறிப்பாக, டெஸ்ட் போட்டியின் தொடக்க ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனையும் படைத்து இருந்தார்.

publive-image

இருப்பினும், அவர் ஒரு ஆல்-ரவுண்டராக இருக்க விரும்பியதால், அவரது ஒருநாள் ஆட்ட திறன் குறையத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, அவ்வபோது அவருக்கு ஏற்பட்ட காயங்கள் அவருக்கு பெரும் பின்னடைவை கொடுத்தன. இதனால் அவர் உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்தார்.

அம்பதி ராயுடு

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இந்திய அணியில் அம்பதி ராயுடுவைத் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் சிறப்பான மட்டையை சுழற்றிய அவர் 47 என்கிற நல்ல சராசரியைக் கொண்டிருந்தார். இதற்கிடையில், உள்ளுர் தொடர்களிலும் அவர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், அந்த நேரத்தில் இந்திய அணி தேர்வாளர்கள் விஜய் சங்கரை தேர்வு செய்வதில் குறியாக இருந்தனர்.

publive-image

இந்த தேர்வுக்கு ரசிகர்களிடம் இருந்தும், முன்னாள் வீரர்களிடம் இருந்தும் கடும் கண்டனத்தை பிசிசிஐ எதிர்கொண்டது. ராயுடு 50 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 1694 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டாப் ஆடரில் களமாடி விளையாடும் அவர் அதிரடியாக ரன்களை குவிக்கக் கூடியவராகவும் இருந்தார். ஆனால், அவரை தவிர்க்க நடத்தப்பட்ட அரசியல், அவரை இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க செய்தது. எனினும், ஐபிஎல் தொடருக்கான மும்பை மற்றும் சென்னை அணிகளில் முக்கிய வீரராக ராயுடு வலம் வந்தார். தற்போது சாம்பியன் வீரராகவும் உள்ளார்.

பார்த்தீவ் படேல்

இந்திய அணியின் அசத்தல் தொடக்க வீரராக இருந்தவர் பார்த்தீவ் படேல். இந்திய அணியில் இணைந்த இளம் விக்கெட் கீப்பர் (17 ஆண்டுகள் மற்றும் 153 நாட்கள்) என்கிற பெருமையையும் அவர் பெற்று இருந்தார். ஒருநாள் தொடரில் அணிக்கு வலுவான தொடக்கம் கொடுப்பவராகவும் அவர் இருந்தார்.

publive-image

ஆனால், அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் அவரது கேரியர் எளிதில் முடிவுக்கு வந்தது. அவரது காலத்தில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி மற்றும் ராகுல் டிராவிட் போன்ற முன்னணி வீக்கெட் கீப்பர்கள் இருந்தனர். இதனால், அவருக்கான வாய்ப்பு குறையத் தொடங்கியது.

2002 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான படேல் 2003 உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராகுல் டிராவிட் திடீரென விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டதால், அவருக்கான விஷயங்கள் மாறியது. தொடர்ந்து அந்த ஆண்டு முழுதும் அவருக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

publive-image

இதேபோல், எம்எஸ் தோனி எதிர்பாராத விதமாக சர்வதேச ஆட்டத்தில் உச்சத்திற்கு சென்றதாலும் பார்த்தீவ்க்கு வாய்ப்பு கிடைக்கமால் போனது. பார்த்தீவ் படேல் இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 736 ரன்கள் எடுத்தார். அவர் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். படேல் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு உண்மையான திறமைசாலி.

விவிஎஸ் லட்சுமணன்

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐந்து இந்திய வீரர்களில் மிகப்பெரிய ஆச்சரியம் விவிஎஸ் லட்சுமணன் தான். இந்தியாவின் மிகவும் திறமையான டெஸ்ட் வீரர்களில் ஒருவராக இருந்தவர் லக்ஷ்மண். இருப்பினும், ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் கேள்விக்குறியாக இருந்தது. அதன் விளைவாக அவருக்கான உலக கோப்பை வாய்ப்பு தவிர்க்கப்பட்டது.

publive-image

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில்-ஆர்டரில் களமாடும் லக்ஷ்மண் 130 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சராசரியாக 45க்கு மேல் 8000 ரன்களை குவித்துள்ளார். அவர் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இருந்தாலும், அவருக்கான ரிதம் கிடைக்கவில்லை.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Sports Ishant Sharma Irfan Pathan Indian Cricket Ambati Rayudu Worldcup Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment