சென்னை டெஸ்ட்: ரோகித் சர்மா சதம், இந்தியா 300/6

ind vs eng chennnai 2nd test: மறுமுனையில் நின்று கொண்டிருக்கும் ரோகித் சர்மா 208 பந்துகளில் 2 சிக்ஸர்களையும், 17 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 150 ரன்களை சேர்த்துள்ளார்.

By: Updated: February 13, 2021, 07:38:57 PM

Cricket news in tami:    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்று நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் ஆலி ஸ்டோன் வீசிய பந்தில் தொடக்க ஆட்ட சுப்மன் கில் பூஜ்ய ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய புஜாரா மறுமுனையில் இருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை மெதுவாக நகர்த்தினர்.

58 பந்துகளில் 2 பவுன்டரிகளை அடித்து 21 ரன்களை சேர்ந்திருந்த புஜாரா ஜாக் லீச் வீசிய பந்தில் பேன் ஸ்டோக்ஸின் கையில் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 5 பந்துகளை மட்டுமே சந்தித்து விட்டு புஜ்ய ரன்களுடன் பெவிலியன் நோக்கி நடையைக் காட்டினார்.

அதைனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கியா ரஹானே, மறுமுனையில் காத்திருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 21.2 ஓவர்களுக்கு பின் ஜோடி சேர்ந்த இந்த வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை நோகடித்து வருகிறார்கள்.

கேப்டன் கோலி விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே இந்த தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார். அவரோடு களத்தில் மறுமுனையில் நின்று கொண்டிருக்கும் ரோகித் சர்மா 208 பந்துகளில் 2 சிக்ஸர்களையும், 17 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு 150 ரன்களை சேர்த்துள்ளார். தற்போது வரை களத்தில் உள்ள இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை திணறடித்து வருகிறது. 69 ஓவர்களை விளையாடியுள்ள இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியைக் காண 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளததால், அவர்களும் களத்தில் அதிரடி காட்டி வரும் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricket news in tamil chennai test ind vs eng rohit sharma hits century and rahane hits fifty

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X