India vs West Indies ODI, T20I Series Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், 3 டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்று கிழமை (6-ம் தேதி) அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணி அளவில் இப்போட்டியானது தொடங்குகிறது.
கேப்டனாக ரோகித் சர்மா
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விலகி இருந்த இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முழு உடற்தகுதியுடன் கம்பேக் கொடுக்க உள்ளார். மேலும், கேப்டனாக இவ்விரு தொடரிகளில் பங்கேற்கும் இந்திய அணியை அவர் வழிநடுத்துகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் - கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடுவதன் மூலம் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க உள்ளனர்.
இதில், கோலி இன்னும் 6 ரன்கள் அடித்தால், உள்ளூரில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் தான் இந்த சாதனையை படைத்தார். அவர் இந்த சாதனையை தனது 121-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக படைத்தார்.
விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்களை அடிப்பதன் மூலம் 96-வது இன்னிங்சில் இந்த சாதனையை அடைய முடியும்.
இதேபோல், சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு முக்கிய சாதனையை முறியடிக்க ரோகித் சர்மா காத்திருக்கிறார். அவர் இந்த தொடரில் இன்னும் 50 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி 2வது இடம் பிடிப்பார்.
சச்சின் 39 போட்டிகளில் 1,573 ரன்களை குவித்திருந்தார். தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 1,523 ரன்களை குவித்துள்ளார். எனவே அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 50 ரன்கள் மட்டுமே தேவை.
இப்பட்டியலில் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 39 போட்டிகளில் 2,235 ரன்களை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடித்துள்ளார். அவரது சராசரி 72.09 ஆக உள்ளது.
1000வது ஒருநாள் போட்டி
நாளை இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் அணி விளையாடப்போகும் 1000வது ஒருநாள் போட்டியாகும். இந்த ஆட்டத்தில் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்த சாதனைகளை படைக்கும் போது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
மைல்ஸ்டோன் போட்டிகளில் இந்திய கேப்டன்கள்:
முதல் போட்டி: அஜித் வடேகர் vs இங்கிலாந்து
100வது போட்டி: கபில் தேவ் vs ஆஸ்திரேலியா
500வது போட்டி: சவுரவ் கங்குலி vs இங்கிலாந்து
600வது போட்டி: வீரேந்திர சேவாக் vs இலங்கை
700வது போட்டி: எம்எஸ் தோனி vs இங்கிலாந்து
750வது போட்டி: எம்எஸ் தோனி vs இலங்கை
900வது போட்டி: எம்எஸ் தோனி vs நியூசிலாந்து
1000வது போட்டி: ரோகித் சர்மா vs வெஸ்ட் இண்டீஸ்
பும்ரா - ஷமிக்கு ஓய்வு
பும்ரா - ஷமிக்கு ஓய்வு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி நேற்று வெள்ளிக்கிழமை முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காணப்படவில்லை.
இந்த தொடரில் விளையாடுவதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுஸ்வேந்திர சாஹலுடன் ஜோடி சேருகிறார். அதே நேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒருநாள் அணியிலோ அல்லது டி20 அணியிலோ சேர்க்கப்படவில்லை. இதேபோல், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தனது முழங்கால் காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா குணமடைந்து வருகிறார்.
#TeamIndia begin preps in Ahmedabad ahead of the ODI series against West Indies.#INDvWI pic.twitter.com/aYTd1QuexB
— BCCI (@BCCI) February 4, 2022
கீரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஷிம்ரோன் ஹெட்மியர் உடற்தகுதி காரணமாக மீண்டும் ஒருமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் உடல் தகுதி குறித்த ஹெட்மைரின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்.
WI had our first training session in India earlier today, as the #MenInMaroon prepare to take on @BCCI in 3 ODI’s starting in February 6! #INDvWI 🏏🌴 pic.twitter.com/AMYSzeFsPC
— Windies Cricket (@windiescricket) February 4, 2022
ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இரு அணிகள் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு
இந்திய ஒருநாள் அணி
ரோஹித் சர்மா (கேப்டன் ), கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர். ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்
இந்திய டி20 அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர். முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி
கெய்ரன் பொல்லார்ட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், பிராண்டன் கிங், ஃபேபியன் ஆலன், என்க்ருமா பொன்னர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், அக்கேல் ஹொசைன், அல்சார்ரி ஜோசப், கெமர் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியான் ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ்.
Ready to battle India in the 3️⃣ match ODI series.💪🏽#INDvWI #MenInMaroon pic.twitter.com/nbff1ILDJ1
— Windies Cricket (@windiescricket) February 4, 2022
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி
கெய்ரன் பொல்லார்ட் (கேப்டன்) ஃபேபியன் ஆலன், என்க்ருமா பொன்னர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், கெமர் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.