Advertisment

SuryaKumar Yadav: ஸ்பெஷல் மேன்… ஸ்பெஷல் ரெக்கார்ட்… 43 போட்டிகளில் 3-வது சதம்!

இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய சூரியகுமார் வெறும் 43 போட்டிகளில் தனது 3வது டி20 சதத்தை பதிவு செய்து ராகுலை முந்தினார்.

author-image
WebDesk
New Update
cricket news in tamil; Suryakumar shatters records, century vs SL

India's Suryakumar Yadav celebrates after scoring a century during the third Twenty20 cricket match between India and Sri Lanka in Rajkot, India, Saturday, Jan. 7, 2023. (AP Photo/Ajit Solanki)

இந்தியா வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Advertisment

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

ருத்தர தாண்டவம் ஆடிய சூரியகுமார்… இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு!

இந்த ஆட்டத்தில் ராகுல் திரிபாதியின் விக்கெட்க்கு பிறகு களமிறங்கிய அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரர் கில் -உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். மேலும், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதலில் பவுண்டரிகளை விரட்டிய அவர் அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், தனது அதிரடியை கைவிடாத அவர் சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். அதோடு, 360 டிகிரி வீரரான அவர் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்துகளை விரட்டினார். தொடர்ந்து 45 பந்துகளில் பந்துகளில் சதம் விளாசினார். அவர் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

9 மாதங்களில் 3வது டி20 சதம்

டி20 கிரிக்கெட்டில் கடந்தாண்டில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் அதை நடப்பாண்டிலும் தொடர்ந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் சதம் விளாசியதன் மூலம் கடந்த 9 மாதங்களில் தனது 3வது சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதிவேக டி20 சதம்

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சூரியகுமார் 45 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், அதிவேக டி20 சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.

இந்திய வீரர்களின் அதிவேக டி20 சதம் (பந்துகள்):

ரோஹித் சர்மா- 35 பந்துகளில்

சூர்யகுமார் யாதவ் - 45 பந்துகளில்

டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல் (டாப் 4):

ரோஹித் சர்மா - 4

சூர்யகுமார் யாதவ் - 3

கேஎல் ராகுல் - 2

விராட் கோலி - 1

ராகுலை முந்திய சூரியகுமார்

கடந்த 2016ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்துடன் 46 போட்டிகளில் 2வது டி20 சதத்தை விளாசினார் தொடக்க வீரர் கே.எல் ராகுல். இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசிய சூரியகுமார் வெறும் 43 போட்டிகளில் தனது 3வது டி20 சதத்தை பதிவு செய்து ராகுலை முந்தினார்.

5வது வீரர்

ரோஹித் ஷர்மா (4), கிளென் மேக்ஸ்வெல் (3), கொலின் முன்ரோ (3), சபாவூன் டேவிசி (3) ஆகியோருக்குப் பிறகு டி20 போட்டிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களைப் பதிவு செய்த 5வது பேட்டர் ஆனார் சூரியகுமார் யாதவ்.

டி20யில் சதம் அடித்த இந்திய வீரர்கள்:

ரோஹித் சர்மா - 4

சூர்யகுமார் யாதவ் - 3

கேஎல் ராகுல் - 2

சுரேஷ் ரெய்னா - 1

ஹர்மன்ப்ரீத் கவுர் - 1

தீபக் ஹூடா - 1

விராட் கோலி - 1.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Srilanka Suryakumar Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment