இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இல்லாதது ஒரு "பெரிய மிஸ்" என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 17) அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நாடு திரும்புகிறார்.
அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட்கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் துணைக்கேப்டன் அஜிங்க்யா ரஹானே கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல். போது ஏற்பட்ட விலா எலும்பு பகுதியில் காயமடைந்து இஷாந்த் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் அவர் உடல்தகுதி பெறவில்லை என்பதால் இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறுகையில்,
நாங்கள் நிச்சயமாக இஷாந்தை இழப்போம், மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தற்போது காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இஷாந்த் இல்லாத போதிலும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் அடங்கிய வேக தாக்குதல் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று நம்புகிறேன்..
மேலும் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்,(நவ்தீப் சானி, முகமது சிராஜ் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது) ஷாமியுடன், இணைந்து 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான தாக்குதல் எங்களிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன்," தொடக்க வீரர்கள் வரிசையில், மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, சுப்மான் கில் மற்றும் கே.எல். ராகுல் மற்றும் விக்கெட் கீப்பிங்கில், விருத்திமான் சஹா மற்றும் ரிஷாப் பந்த் ஆகியோரில் ஆடும் லெவன் அணியில் இடம்பெறவது யார் என்பது குறித்து போட்டியின் முந்திய நாளில் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"