Advertisment

ஒருபோதும் நான் பவுலராக மாறி இருக்கக் கூடாது: முதல் முறையாக அஸ்வின் வருத்தம்

தான் ஒரு பேட்ஸ்மேனாக இல்லாமல், பந்துவீச்சாளராக மாறியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cricket, Ravichandran Ashwin latest interview in tamil

Indian spinner R Ashwin. PTI

Ravichandran Ashwin latest interview Tamil News: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisment

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்து இருந்தார். ஆனால், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அஸ்வின் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த விவாதம் போட்டி தொடங்கும் முன்பும், இந்தியாவின் தோல்விக்கு பிறகும் கடுமையாக இருந்தது. சமூக வலைதளங்களில் பலரும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். இதேபோல், முன்னாள் வீரர்களும் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடி இருந்தனர்.

தற்போது, அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடந்தும் 7வது டி.என்.பி.எல் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி அதன் தொடக்க ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அஸ்வின் பேட்டி

இந்நிலையில், அஸ்வின் நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் ஒரு பேட்ஸ்மேனாக இல்லாமல் பந்துவீச்சாளராக மாறியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், அணியில் அவர் தனிமைப்படுத்தப்படுவது குறித்தும், கடந்த காலங்களில் தன்னை அடிக்கடி அணியில் கழற்றி விடப்பட்டதால் தான் எப்படி அதிர்ச்சியடைந்தேன் என்றும், அவரை 'அதிகம் சிந்திப்பவர்' என முத்திரை குத்தி சிலர் அவருக்கு "எதிராக" தீவிரமாக செயல்பட்டதால், கேப்டன்சி வாய்ப்புகளை எப்படி தவறிவிட்டார் என்பது பற்றியும் பேசியுள்ளார்.

“இது ஒரு உண்மைக் கதை… ஒரு நாள், நான் இந்தியா-இலங்கை ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன், இந்தியாவின் பந்துவீச்சு சிதைந்து போனது. எனக்கு மிகவும் பிடித்தது சச்சின் டெண்டுல்கர். அவர் எடுத்த ரன்களை, நாங்கள் பந்துவீச்சில் விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது தான் நான் ஒரு பந்து வீச்சாளராக இருக்க வேண்டும் என நினைத்தேன். தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களை விட என்னால் சிறப்பாக இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பி கொண்டேன். இது மிகவும் குழந்தைத்தனமான சிந்தனை என்றாலும் நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டேன். அதனால்தான் நான் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சைத் தொடங்கினேன். அங்கிருந்து தான் அது தொடங்கியது.

இருப்பினும், நான் ஓய்வை அறிவிக்கும்போது, ​​​​நான் முதலில் வருந்துவது, இவ்வளவு சிறந்த பேட்ஸ்மேனானக இருந்துவிட்டு, ஒருபோதும் பந்து வீச்சாளராக மாறியிருக்கக் கூடாது என்பதைத் தான். இது (WTC இறுதிப் போட்டியில் இருந்து கைவிடப்பட்டது) ஒரு தடுமாற்றம் தான், நான் அதைக் கடந்து சென்றதால் நான் முன்னேறுவேன். யாராவது உங்களை முதன்முறையாகத் தட்டினால், உங்களுக்கு முழங்காலில் அடிபடும்.

R Ashwin

R Ashwin appeals for a wicket. (File).

நிறைய பேர் என்னை அதிகம் சிந்திப்பவன் என்று சொல்லி அவதூறு பரப்பினார்கள். தனக்கு இரண்டு கேம்களில் மட்டுமே கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு நபர் அதிர்ச்சியடைந்து, கண்டிப்பாக அதுபற்றி அதிகமாகச் சிந்திப்பார். ஏனெனில் அது தான் எனது வேலை. அதை (அதிக சிந்திப்பவன் என்ற முத்திரை) எனக்கு எதிராக செய்லபட பயன்படுத்திக் கொண்டனர், இல்லையா?. நான் சொன்னது போல், அணியில் கேப்டன்சி (தலைமைத்துவம்) என்ற கேள்வி என் வழியில் வரும் போதும், வெளிநாட்டில் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் போதும், ​​பேப்பரில் எனது பெயர் முதல் பெயராக இடம் பிடிக்காது என்று சிலர் எல்லா நேரங்களிலும் கூறியிருக்கிறார்கள்.

நான் முன்பை விட இப்போது மிகவும் கூலாக இருக்கிறேன். நான் எப்போதும் இருந்ததை விட மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். இன்று இங்கு அமர்ந்திருக்கும் போது, ​​அது என்னை மனதளவில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஆனால் அந்த வழியாக வந்து ஒரு புதிய என்னைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, ​​உங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தனர். இப்போது, ​​அவர்கள் சக ஊழியர்களாகி விட்டார்கள். ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் இங்கே உள்ளவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், உங்கள் வலது அல்லது இடது பக்கம் அமர்ந்திருக்கும் மற்றொரு நபரை விட முன்னேறவும் பார்க்கிறார்கள். எனவே, 'ஓகே பாஸ் நீங்கள் அடுத்த என்ன போகிறீர்கள்' என்று உங்களிடம் கேட்க யாருக்கும் நேரம் இல்லை?" என்று அஸ்வின் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team World Test Championship Indian Cricket Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment