சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதில், குறிப்பிடும்படியாக நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படும் வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு அதிகாரம் வழங்குகிறது. கால்பந்து பந்து போட்டிகளில் ரெட் கார்டு கொடுத்து வீரர்கள் வெளியேற்றப்படுவார்களே, அதுபோன்ற நடவடிக்கை தான் கிரிக்கெட் போட்டியிலும் இனி வரவுள்ளது. இதேபோல, ஃபீல்டிங், ரன்அவுட், கேட்சஸ் போன்றவற்றிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வீரர்களை வெளியேற்றுவது: 4-வது லெவல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதாவது, நடுவரை தாக்குல் மற்றும் அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், நடுவர் அல்லது வீரர்களை இடித்து தள்ளுவது போன்றவை 4-வது லெவல் குற்றமாகும்.
பேட் அளவு: கிரிக்கெட் பேட்டின் நீளம், மற்றும் அகலத்தின் எந்தவித மாற்றமும் இல்லை என்றபோதிலும், பேட்டின் எட்ஜ் பகுதியானது 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
அதேபோல, டெப்த் அதிகபட்சமாக 67 மி.மீ வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடுவர்களுக்கு பிரத்யேக கருவி வழஙகப்படுமாம்.
டி.ஆர்.எஸ்: டி20 போட்டிகளில் டி.ஆர்.எஸ் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோல, டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் முதல் 80-க்கு பின்னர் டி.ஆர்.ஆஸ் பயன்படுத்த முடியாது. ஒரு இன்னிங்ஸிக்கு 2 டி.ஆர்.எஸ் வாய்ப்புகள் வழங்கப்படும்.
ரன் அவுட் மற்றும் ஸ்டம்பிங்: வீரர் ஒருவர் கிரீசில் பேட்டை வைத்துவிட்டு, பேட் மேலே எழும்பினாலோ, அல்லது பேட் நழுவிடும் சமத்தில், பந்தைக் கொண்டு ஸ்டம்பில் அடித்தால் அது ரன் அவுட் என கருதப்படமாட்டாது. ஒருமுறை பேட்டினை கிரீஸில் வைத்தபின்னர், பேட் மேலே எழும்பினால் அது ரன் அவுட் இல்லை என்பதாகும். ஸ்டம்பிங்கிற்கும் இதே விதி தான் கொண்டு வரப்படுகிறது.
கேட்ச்: ஃபீல்டர்கள் பந்தை பிடிக்கும்போது எல்லைக்கோட்டிற்கு உள்ளே இருந்து தான் ஜம்ப் செய்து பந்தை பிடிக்க வேண்டும். வெளியே இருந்து ஜம்ப் செய்து பந்தை பிடித்தால் அது அவுட் இல்லை என்றே எடுத்துக் கொள்ளப்படும். பேட்ஸ்மேன் அடிந்த பந்து ஃபில்டர் அல்லது விக்கெட் கீப்பரின் ஹெல்மெட்டில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டால் அது அவுட்டாகவே கருதப்படும். இதேபோல, ஹெல்மெட்டில் பந்துபட்டு ரன் அவுட், ஸ்டம்பிங் போன்றவற்றிலும் இந்த விதிமுறை பொருந்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.