scorecardresearch

காரில் ஓவர் ஸ்பீடு… 3 ஆண்டுக்கு முன்னே பண்ட்-ஐ எச்சரித்த தவான் – வீடியோ

காரை அதிவேகமாக ஓட்டுவது குறித்து ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 3 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Cricket Tamil News; Old video of Dhawan warning Pant goes viral
Watch video: “Drive Carefully," Said Shikhar Dhawan To Rishabh Pant In 2019 Tamil News

 Shikhar Dhawan’s advice to Rishabh Pant Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு பென்ஸ் காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்ற நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் கார் முற்றிலும் எரிந்து நாசமாகியது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 ஆண்டுக்கு முன்னே பண்ட்-ஐ எச்சரித்த தவான்

இந்நிலையில், வாகனம் ஓட்டுவது குறித்து ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 3 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஒரு பேட்டியின் போது, ‘எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள்’ என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார். அதற்கு, ‘நீ வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்’ என்று ஷிகர் தவான் அறிவுரை வழங்கினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில், தவான் பண்ட்டை எச்சரித்த அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket tamil news old video of dhawan warning pant goes viral