Sri Lanka Tour of India 2023 Squads, Suryakumar Yadav Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, டி20 போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
SKY-க்கு தந்தை அனுப்பிய முதல் மெசேஜ்
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக தான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் இது கடந்த காலத்தில் தனது கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்றும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமாடி விளையாடி வரும் சூர்யகுமார் சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியின் போது கிடைத்த இடைவேளையில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுடன் உரையாடினார். அப்போது அவர், “இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு சென்றதைப் பார்க்கையில், இது எனக்கு கிடைத்த ஒரு வெகுமதி போன்றது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். இது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எனது தந்தை எனக்கு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை அனுப்பினார். அவர் எப்போதும் சமூக ஊடகங்களில் இருக்கிறார் மற்றும் எனக்கு விஷயங்களை அனுப்பி கொண்டே இருப்பார். இந்த செய்தியைப் பார்த்தவுடன் அவரிடம் பேசினேன். அதில் அவர், அழுத்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் மற்றும் பேட்டிங்கை அனுபத்து விளையாட வேண்டும்’ என்ற ஒரு சிறிய செய்தியை வைத்திருந்தார்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது முதல் ரியாக்சன் ‘இது ஒரு கனவா என்று ஆச்சரியமாக இருந்தது’ என்றுள்ளார். “நான் கண்களை மூடிக்கொண்டு, இது ஒரு கனவா?” என்று இருந்தேன். ஆனால் அது மிகவும் நன்றாக இருந்தது. அது இன்னும் ஒரு கனவு போல உணர்கிறது. ஆனால் இது கடந்த பல வருடங்களின் கடின உழைப்பு. அது பல ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதை. இப்போது மரம் போல் வளர்ந்துள்ளது. இப்போது நான் அதன் பழங்களைச் சாப்பிடுகிறேன். என்னால் முடிந்தவரை நீட்டிக்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.
டி20 போட்டி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா குறித்து பேசிய சூர்யகுமார், “அவருடனான (ஹர்திக்) பந்தம் எப்போதும் நன்றாகவே உள்ளது. அது மும்பை இந்தியன்ஸாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி. நாங்கள் ஒரே வரிசையில் பேட்டிங் செய்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்கிறோம். அவர் ஒரு அற்புதமான லீடராக இருப்பார். எல்லோரும் அதை ஐபிஎல் மற்றும் இந்தியாவில் பார்த்திருக்கிறார்கள், அவருடைய கேப்டன்சியின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்.” என்று கூறினார்.
#RanjiTrophy #CricketTwitter
— Express Sports (@IExpressSports) December 28, 2022
(Credits @pdevendra) pic.twitter.com/S6ervcqnzg
இலங்கை – டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை – ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணைகேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil