Watch: Cheteshwar Pujara slams 22 runs in one over in Royal London One Day Cup Tamil News: இங்கிலாந்தில் ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் வார்விக்ஷயர் - சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வார்விக்ஷயர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதமடித்த அசத்திய தொடக்க வீரர் ராபர்ட் யேட்ஸ் 114 ரன்களும், அரைசதமடித்த கேப்டன் டபிள்யூ ரோட்ஸ் 78 ரன்களும், மைக்கேல் பர்கெஸ் 58 ரன்களும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 311 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை கேப்டன் சேதேஷ்வர் புஜாரா தலைமையிலான சசெக்ஸ் அணி துரத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய அலிஸ்டர் ஓர் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுமுனையில் இருந்த ஹாரிசன் வார்டு அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் களமாடிய டாம் கிளார்க் 30 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பிறகு களம் புகுந்த கேப்டன் புஜாரா தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அரைசதம் அடித்த கையோடு அதிரடியாக ஆட ஆரம்பித்தார். அவரின் சசெக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி பத்து ஓவரில் 102 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் புஜாரா 22 பந்துகளில் அரைசதத்தில் இருந்து சதமடித்து மிரட்டினார். குறிப்பாக ஆட்டத்தின் 47 வது ஓவரை அடித்து நொறுக்கி அள்ளினார் என்றே கூறலாம்.
அந்த ஓவரை வார்விக்ஷயர் அணியின் லியாம் நார்வெல் வீசிய இருந்தார். அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல காத்திருந்த புஜாரா 4 2 4 2 6 4 என அதிரடி காட்டி ரன் மழை பொழிந்தார். இது பலருக்கும் புஜாரா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் இருந்தது. மேலும், புஜாரா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தை உயிர்ப்புடனும் வைத்திருந்தார். அவர் 79 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை விரட்டி அடித்து 107 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு அருகில் நெருங்கிய சசெக்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வார்விக்ஷயர் அணியிடம் தோல்வி கண்டது.
4 2 4 2 6 4
TWENTY-TWO off the 47th over from @cheteshwar1. 🔥 pic.twitter.com/jbBOKpgiTI— Sussex Cricket (@SussexCCC) August 12, 2022
கவுண்டி கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதம்…
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக இருந்து வரும் மூத்த வீரர் புஜாரா, இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விட்டதால், அவர் கடந்த இரண்டு ஆண்டாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ‘சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப்’ அணியில் களமாடி வரும் புஜாரா, கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த ஆட்டத்தில் மிச்சிறப்பாக விளையாடி இருந்தார். அவரின் பழைய ஃபார்மை மீட்டெடுத்து இருந்தார். அவரின் ஸ்டைலிஷ் பேட்டிங் இங்கிலாந்தினரை கவர்ந்து இழுத்தது.
கடந்த ஏப்ரல் 14 முதல் 17 வரை நடந்த டெர்பிஷயர் – சசெக்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலாவது இன்னிங்ஸில் புஜாரா 6 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தார். தொடர்ந்து நடந்த 2வது இன்னிங்ஸில் அவர் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். மேலும், அவர் 387 பந்துகளில் 23 பவுண்டரிகளை துரத்தி 201 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் அதிரடியான ஆட்டம் சசெக்ஸ் அணி ட்ரா செய்ய உதவியது.
இதேபோல், ஏப்ரல் 21முதல் 23 வரை நடந்த போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் – சசெக்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தனது 2வது சதத்தை பதிவு செய்த புஜாரா 206 பந்துகளில் 16 பவுண்டர்களை விளாசி 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேலும், ஏப்ரல் 28ம் தேதி முதல் நடந்த, டர்ஹாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் ஒரு சதம் அடித்து மிரட்டி இருந்த புஜாரா, தனது ஹாட்ரிக் சதத்தை பதிவு செய்தார்.
இதையும் படியுங்கள்: உள்ளூரில் துரத்தப்பட்ட புஜாரா; இங்கிலாந்தில் ஹாட்ரிக் சதம்!
இப்படி கவுண்டி கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்த அவருக்கு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கவுண்டி கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது ஒருநாள் தொடரிலும் புஜாரா தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் இந்த அதிரடி தொடரும் பட்சத்தில் அவருக்கான இந்திய ஒருநாள் அணி வாய்ப்பு வெகுதொலைவில் இல்லை.
Gutted we couldn't see this one through! Brave effort by the team. We gear up for the next one @SussexCCC 💪 #SharkAttack pic.twitter.com/CcjnvJiPzt
— cheteshwar pujara (@cheteshwar1) August 12, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.