Cricket video news in tamil: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் மூத்த வீரர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்த 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியை சுவைத்து, தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
இந்த தொடரைத் தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. ஜூலை 29 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடருக்கான இந்திய அணியை வழக்கம் போல் கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் கே.எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் முழு உடற்தகுதியைப் பொறுத்தே அவர்கள் களமிறங்குவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய டி-20 அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், புவனேஷ்வர் குமார். அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
இன்ஸ்டா லைவ்வில் இந்திய வீரர்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித், வீரர்கள் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்றனர். அப்போது வீரர்கள் சில வேடிக்கையான கேலிகளில் ஈடுபட்டனர் மற்றும் ரசிகர்களுடன் உரையாடினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அக்சரின் மேட்ச் வின்னிங் நாக் குறித்து பண்ட் பாராட்டினார். இதற்கு, ஆல்ரவுண்டர் அக்சர் படேல், "கடந்த போட்டியில் நீங்கள் முடித்ததைப் போல, நான் அங்கிருந்து உத்வேகம் பெற்றேன்" என்று பதிலளித்தார்.
'தல' தோனி கேமியோ
இந்த வீடியோ நேரலையில் ஹைலைட் என்னவென்றால், முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி கேமியோவாக தோன்றியது. அவர் திடீர் என சில வினாடிகள் லைவ் வீடியோவில் தோன்றினார். அவரரைப் பார்த்த அனைவரும் வாயடைத்துப்போனார்கள். மேலும், இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
நேரலை முடிவடைவதற்கு சற்று முன்பு தோன்றிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தோனி, தனது முன்னாள் அணியினருக்கு புன்னகையை தவழ விட்டு “ஹாய்” என்று கை அசைத்தார். ஆனால் வேறு ஏதும் பேசவில்லை. தோனியின் மனைவி சாக்ஷியும் அந்த வீடியோ கிளிப்பில் தோன்றி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு “ஹாய்” என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil