சச்சினோ... தோனியோ... எவ்ளோ பெரிய கிரிக்கெட் பிளேயரா இருந்தாலும், 'கல்லி' கிரிக்கெட்... அதாங்க தெருவுல கிரிக்கெட் ஆடாம இருந்திருக்க முடியுமா? தம்மாத்தூண்டு எடத்துல ஒரேயொரு குச்சிய நட்டு, டிரையல் பால் வீசி, அதுக்கப்புறம் ஆல் டிரையல் பால் வீசி கிரிக்கெட் விளையாடாம அந்த பிராட்மேன் கூட வந்திருக்க முடியாது. இப்ப என்ன தான் சொல்ல வர-ணு நீங்க கேட்குறது புரியுது.
நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின் அவரோட ஃபேஸ்புக்ல இன்னைக்கு ஒரு போஸ்ட் போட்டிருக்கார். அதில், கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் 'கல்லி' கிரிக்கெட் ஆடியதாகவும், அவர் விளையாட வந்த போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல், உங்களது கல்லி கிரிக்கெட்டின் போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை கமெண்ட்டில் பகிருமாறும் குறிப்பிட்டுள்ளார்.