2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்காக, மிகப்பெரிய அளவில் ரீ-லான்ச் ஆகவிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. புதிய அணிச் சேர்க்கை, புதிய தீம் சாங், புதிய விளம்பரங்கள் என சிஎஸ்கேவின் அடையாளமே மாறி இருக்கிறது. ஆனால் மாறாதது தல தோனியும், மஞ்சள் ஜெர்சியும் தான். ஏனெனில், இவை இரண்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளமே!.
தோனி உட்பட வீரர்கள் தற்போது பயிற்சியை தொடங்கிவிட்டனர். பேட்டிங் கோச் மைக் ஹஸ்சி-யின் மேற்பார்வையில் அனைவருக்கும் தற்போது, ஷாட் அடித்தால் பேட் திரும்பாமல் இருக்கும் அளவிற்கு, துல்லியமான ஷார்ட்கள் குறித்து டிப்ஸ்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சிஎஸ்கே சார்பாக ஒரு புதிய ஆப் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘CSKAPP’ என்று அழைக்கப்படும் இதில் டிக்கெட் புக் செய்வது, லைவ் ஸ்கோர்கள் பார்ப்பது, செய்திகள், வீரர்களின் பேட்டிகள், பரிசுப் பொருட்கள் என பல சுவாரஸ்யமான அம்சங்கள் இடம்பெற உள்ளதாம்.
சிஎஸ்கே-வின் இந்த அதிகாரப்பூர்வ ஆப், விரைவில் கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get ready for the all new #CSKAPP powered by @Tekplaysystems. #FollowTheRap #WhistlePodu #SummerIsComing pic.twitter.com/kXmZm9BxYN
— Chennai Super Kings (@ChennaiIPL) 24 March 2018
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Csk introduced cskapp for ipl