IPL 2023 Qualifier 1, CSK vs GT Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடருக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிஃபயர் -1) ஆட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் பரபரப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சென்னை அணியில் பேட்டிங்கில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட்60 ரன்களும், டெவோன் கான்வே 40 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லிப்ட் குலுங்க குலுங்க குத்தாட்டம்
இந்த ஆட்டத்திற்குப் பிறகு சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ உடன் இணைந்து லிஃப்டில் வீரர்கள் உற்சாகமாக நடனமாடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil