என்னது கப் ஜெயிச்சாச்சா!? சேட்டை சிஎஸ்கே-வின் வைரல் வீடியோ!

தோனி கேட்ச் பிடிக்க, ஹர்பஜன் சிங் கையில் ஐபிஎல் கோப்பையை வைத்து ஆடிக் கொண்டிருக்க...

11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த நிலையில், ஒவ்வொரு அணியும், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஸ்டிராடஜி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், டெல்லி டேர் டெவில்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் இந்த விவாதத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

நம்ம சென்னை அணி மட்டும் விதிவிலக்கா..! மஞ்சள் ஜெர்சிக்குள் சில புதிய வீரர்கள். வாட்சன், ஹர்பஜன் போன்ற மோஸ்ட் சீனியர் வீரர்களும் அணியில் புதிதாக இணைந்துள்ளனர். இதனால், சென்னை அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரிய வரும். என்ன இருந்தாலும், சென்னை ரசிகனின் ஒரே பதில், ‘யோவ் தோனி கேப்டன்யா…! இங்க பேச்சுக்கே இடமில்ல’ என்பதுதான்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை வைத்து ஃபோட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்கள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. தோனி உட்பட வீரர்களின் புதிய படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ட்விட்டரில் அப்லோட் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஒரு விளம்பரம் ஒன்றின் 8 நொடிகள் கொண்ட வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், தோனி கேட்ச் பிடிக்க, ஹர்பஜன் சிங் கையில் ஐபிஎல் கோப்பையை வைத்து ஆடிக் கொண்டிருக்க, பிராவோ, ரெய்னா, முரளி விஜய் உட்பட பல சென்னை அணி வீரர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டே செல்வது போல் உள்ளது அந்த வீடியோ. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனை பார்த்துள்ளனர்.

ஆனால், இது ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகள் பங்குபெறும் விளம்பரத்தின் ஒரு பகுதியா, அல்லது சென்னை அணிக்கென்று பிரத்யேகமாக புதிதாக உருவாக்கப்படும் விளம்பரமா என்ற தகவல் கிடைக்கவில்லை.

ஐபிஎல் நிர்வாகம் மற்றும் அதன் அணிகளின் பிராண்ட் வேல்யூ புள்ளி விவரத்தை அலசும் ‘American Appraisal India and Duff & Phelps’ எனும் நிர்வாகத்தையே, இரண்டு ஆண்டு தடையின் போது,  தங்கள் அணிக்கான ஆதரவை வானளவு காட்டி தெறிக்க விட்டவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ள சென்னை அணிக்காக இந்த வீடியோவை வைரலாக்கி வருவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close