scorecardresearch

CSK vs PBKS Highlights: பரபரப்பின் உச்சம்… சென்னையின் போராட்டம் வீண்; கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றி!

சென்னை அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.

CSK vs PBKS Live Score | Chennai vs Punjab Live Score | IPL 2023 Score
ஐபிஎல் 2023, சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர்

 CSK vs PBKS IPL 2023 Highlights in tamil 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கிய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

Indian Premier League, 2023MA Chidambaram Stadium, Chennai   07 June 2023

Chennai Super Kings 200/4 (20.0)

vs

Punjab Kings   201/6 (20.0)

Match Ended ( Day – Match 41 ) Punjab Kings beat Chennai Super Kings by 4 wickets

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி அணிக்கு மெதுவான தொடக்கம் கொடுத்தாலும் 3வது ஓவர் முதல் அதிரடியாக மட்டையை சுழற்றினர். அதனால், ரன் ரேட்டும் விறுவிறுவென ஏறியது.

இந்த ஜோடியை பவர் பிளே முடிவதற்குள் உடைக்க முயன்ற பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. சிக்கந்தர் ராசா வீசிய 10 வது ஓவரில் இறங்கி வந்து ஆட முயற்சித்த தொடக்க வீரர் ருதுராஜ் 37 ரன்கள் (31 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பிறகு வந்த ஷிவம் துபே-வுடன் தொடக்க வீரர் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் துபே அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். 2 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் அவர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மொயீன் அலி 10 ரன்னில் அவுட் ஆனார். இதனிடையே, களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் கான்வே அரைசதம் அடித்து மிரட்டினார். தனது அதிரடியை ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்திருந்தார். இந்த ஜோடியில் ஃபுல் டாஸ் பந்தை சிக்ஸர் பறக்கவிட முயன்ற ஜடேஜா கேட்ச் கொடுத்து 10 ரன்னில் அவுட் ஆனார்.

ஜடேஜாவின் விக்கெட்டுக்குப்பின் களமிறங்கிய தோனி கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஃபினிஷிங் டச் கொடுத்தார். தொடக்க வீரர் டெவோன் கான்வே 92 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அதனால், பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் – ஷிகர் தவான் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியில் கேப்டன் தவான் 28 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னில் அவுட் ஆனார்.

அதர்வா டைடே 13 ரன்னிலும், அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டோன் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய சாம் குர்ரான் 29 ரன்னில் அவுட் ஆனார். பஞ்சாப் அணி அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும் ரன் ரேட்டை நேர்த்தியாக உயர்த்தி கொண்டே இருந்தனர்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், துஷார் தேஷ்பாண்டே வீசிய 3வது பந்தில் அதிரடியாக விளையாடி வந்த ஜிதேஷ் சர்மாவை ஷேக் ரஷீத் அசத்தலான கேட்ச் எடுத்தார். எனினும், அடுத்த பந்தில் துஷார் தேஷ்பாண்டே பவுண்டரி கொடுத்தார். இதனால், பஞ்சாபின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

வழக்கம் போல் ஆட்டம் பரபரப்பில் உச்சம் செல்ல, ரசிகர்கள் சி.எஸ்.கே… சி.எஸ்.கே… என உற்சாக ஆதரவு கொடுத்தனர். கடைசி ஓவரை வீசிய பத்திரனா முதல் 5 பந்தில் 6 ரன்களை விட்டுக்கொடுத்தார். இப்போது பஞ்சாப் வெற்றி பெற கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையானது. அந்தப் பந்தை லெக் சைடில் வளைத்து அடித்தார் சிக்கந்தர் ராசா. பவுண்டரி உருண்டோடிய பந்தை சென்னை வீரர்கள் தடுத்து இருந்தாலும், பஞ்சாப் அணியினர் 3 ரன்களை ஓடியே எடுத்து விட்டனர். இதனால், சென்னை அணியை பஞ்சாப் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 9 போட்டிகளில் 4ல் தோல்வி, 5ல் வெற்றி கண்டுள்ள சென்னை அணி 10 புள்ளிகளுடன் அதே 4வது இடத்திலே உள்ளது. சென்னை அணி அடுத்ததாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற புதன் கிழமை (மே.3ம் தேதி) லக்னோவில் நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Read More
Read Less
Live Updates
19:02 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- ஜிதேஷ் சர்மா ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.

18:55 (IST) 30 Apr 2023
லிவிங்ஸ்டோன் அவுட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

18:47 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 72 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.

18:42 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 82 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

18:37 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 89 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.

18:32 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 48 பந்துகளில் 96 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

18:28 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 104 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் சாம் கர்ரான்- லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

18:20 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 117 ரன்கள் தேவை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர் அதர்வா டைடே – லியாம் லிவிங்ஸ்டோன் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

18:17 (IST) 30 Apr 2023
பிரப்சிம்ரன் சிங் அவுட்; சுழல் வித்தை காட்டும் ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி வந்த இம்பாக்ட் பிளேயரான பிரப்சிம்ரன் சிங் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 42 ரன்னில் அவுட் ஆனார்.

18:09 (IST) 30 Apr 2023
7 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா டைடே – பிரப்சிம்ரன் சிங் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.

18:04 (IST) 30 Apr 2023
பவர் பிளே முடிவில் பஞ்சாப் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா டைடே – பிரப்சிம்ரன் சிங் ஜோடி விளையாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

18:02 (IST) 30 Apr 2023
தவான் அவுட்; தொடக்க ஜோடியை உடைத்த துஷார் தேஷ்பாண்டே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் துஷார் தேஷ்பாண்டே ஓவரில் கேட்ச் கொடுத்து 28 ரன்னில் அவுட் ஆனார்.

17:54 (IST) 30 Apr 2023
பஞ்சாப்புக்கு நல்ல தொடக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா டைடே – ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.

பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது.

17:24 (IST) 30 Apr 2023
தோனி ஃபினிஷிங் டச்; கான்வே அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் டெவோன் கான்வே 92 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் விக்கெட்டுக்குப்பின் களமிறங்கிய தோனி கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஃபினிஷிங் டச் கொடுத்தார்.

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்துள்ளது. இதனால் பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

17:10 (IST) 30 Apr 2023
ஜடேஜா அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணி வீரர் ஜடேஜா 12ரன்னில் அவுட் ஆனார்.

17:08 (IST) 30 Apr 2023
19 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரவீந்திர ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

17:05 (IST) 30 Apr 2023
18 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரவீந்திர ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

16:59 (IST) 30 Apr 2023
17 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – ரவீந்திர ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

16:55 (IST) 30 Apr 2023
மொயீன் அலி அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. 2 பவுண்டரிகளை ஓட விட்ட சென்னை அணி வீரர் மொயீன் அலி 10 ரன்னில் அவுட் ஆனார்.

16:54 (IST) 30 Apr 2023
16 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே – மொயீன் அலி ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

16:49 (IST) 30 Apr 2023
15 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே மொயீன் அலி ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

16:46 (IST) 30 Apr 2023
துபே அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட சென்னை அணி வீரர் துபே 28 ரன்னில் அவுட் ஆனார்.

16:45 (IST) 30 Apr 2023
14 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

16:31 (IST) 30 Apr 2023
கான்வே அரைசதம்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய வரும் டெவோன் கான்வே அரைசதம் விளாசியுள்ளார்.

16:30 (IST) 30 Apr 2023
12 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே ஷிவம் துபே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

16:23 (IST) 30 Apr 2023
உற்சாகமாக கண்டு களிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உற்சாகமாக கண்டு களித்து வருகிறார்.

16:22 (IST) 30 Apr 2023
10 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் டெவோன் கான்வே ஷிவம் துபே ஜோடி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

16:18 (IST) 30 Apr 2023
ருதுராஜ் அவுட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்னில் அவுட் ஆனார்.

16:13 (IST) 30 Apr 2023
8 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது.

16:03 (IST) 30 Apr 2023
பவர் பிளே முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

15:57 (IST) 30 Apr 2023
5 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.

15:53 (IST) 30 Apr 2023
4 ஓவர்கள் முடிவில் சென்னை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது.

15:48 (IST) 30 Apr 2023
ருதுராஜ் – கான்வே ஜோடி அதிரடி; சென்னை நல்ல தொடக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

சென்னை அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

15:34 (IST) 30 Apr 2023
சென்னை பேட்டிங்; ஆட்டம் இனிதே ஆரம்பம்!

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கிய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட். – டெவோன் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

15:17 (IST) 30 Apr 2023
சென்னையில் இன்றைய வானிலை எப்படி?

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36-37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்ப நிலையில் 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காற்றின் வேகம் 7.48 ஆக இருக்கும். 7.95 வேகத்தில் காற்று 145 டிகிரியை சுற்றி நகரும். 7 நாள் வானிலை முன்னறிவிப்பின்படி, சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை எட்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்ட நேரத்தின் போது மிதமான சாரல் மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், ஆட்டத்தில் பெரிய அளவில் மழையின் பாதிப்பு இருக்காது.

15:09 (IST) 30 Apr 2023
சென்னை பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

15:03 (IST) 30 Apr 2023
டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்; பஞ்சாப் பவுலிங்!

இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதனால், பஞ்சாப் அணி பந்துவீசும்.

14:49 (IST) 30 Apr 2023
சென்னை ஆடுகளம் எப்படி?

எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இந்த சீசனில் பொதுவாக இங்கிருந்து பெரிய ஸ்கோர்கள் வந்துள்ளன. இது பிற்பகல் நேர ஆட்டம் என்பதாலும், இரு அணிகளும் சேஸிங்கை விரும்புவதாலும், விளக்குகளின் கீழ் பேட் செய்வது எளிதாக இருப்பதால், சுழற்பந்து வீச்சும் முக்கியப் பங்கு வகிக்கும்.

14:47 (IST) 30 Apr 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா டெய்ட், சிகந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

14:47 (IST) 30 Apr 2023
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

14:47 (IST) 30 Apr 2023
பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹருக்கு இன்றும் ஓய்வு!

பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இரு திறமையான வீரர்கள் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்கவுள்ளது. ஆல்-ரவுண்டர்கள் இருவரும் காயம் அடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய லெவனுடன் களமாடும்.

14:45 (IST) 30 Apr 2023
ஹர்ப்ரீத் ப்ரார் ஆட வாய்ப்பு

பஞ்சாப் அணியின் கடைசி ஆட்டத்தில், ஹர்பிரீத் ப்ரார் பெஞ்சில் அமர்ந்திருந்தார். ஆனால் சென்னைக்கு எதிரான இன்றைய மோதலில் மீண்டும் அணிக்கு திரும்ப தயாராக உள்ளார். இதற்கிடையில், சிக்கந்தர் ராசா தாமதமான அவரது அற்புதமான ஃபார்மை கருத்தில் கொண்டு தனது இடத்திலே ஆடுவார்.

14:42 (IST) 30 Apr 2023
நேருக்கு நேர்!

சென்னை – பஞ்சாப் அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் சென்னையும், 12-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. சென்னைக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

14:06 (IST) 30 Apr 2023
பஞ்சாப் அணி எப்படி?

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. வெற்றி, தோல்வியை மாறி, மாறி சந்தித்து வரும் அந்த அணி தனது கடந்த லீக் ஆட்டத்தில் லக்னோவுக்கு எதிராக 258 ரன் இலக்கை விரட்டுகையில் 201 ரன்னில் முடங்கி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த அணியின் பேட்டிங் நிலையற்றதாக இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் அந்த அணியின் அதர்வா டெய்ட் (66 ரன்கள்), சிகந்தர் ராசா (36 ரன்கள்) ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை. பந்து வீச்சில் ராகுல் சாஹர் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது

13:54 (IST) 30 Apr 2023
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

தோனி தலைமையிலான சென்னை அணி 8 ஆட்டங்களில் 5ல் வெற்றி, 3ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானுக்கு முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 203 ரன் இலக்கை நோக்கி ஆடி 170 ரன்னில் அடங்கியது. அந்த ஆட்டத்தில், தொடர்ந்து 4 அரைசதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே, அதிரடியாக ஆடி வரும் ரஹானே ஆகியோர் சோபிக்காமல் போனது பின்னடைவாக அமைந்தது.

மேலும் மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கும் அம்பத்தி ராயுடு தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடாததும் பாதகமாக இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே (14 விக்கெட்) கலக்கி வருகிறார். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (11), மொயீன் அலி ( 7) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

13:37 (IST) 30 Apr 2023
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

ஐ.பி.எல். 2023 டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Web Title: Csk vs pbks live score ipl 2023 chennai super kings vs punjab kings cricket match score live updates in tamil