scorecardresearch

தல, தளபதி இருந்தாலும் அங்க சூப்பர் ஸ்டார் யாராக இருக்க முடியும்? – சிஎஸ்கே vs ஆர்சிபி பெஸ்ட் மொமன்ட்ஸ்

தல, தளபதி களத்தில் இருந்தாலும், அங்கே சூப்பர்ஸ்டார் யாராக இருக்க முடியும்?

பேட்ட பராக்... 9 சிங்கிள் டிஜிட்ஸ்... ரெய்னா 5000! - சிஎஸ்கே vs ஆர்சிபி மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்!
பேட்ட பராக்… 9 சிங்கிள் டிஜிட்ஸ்… ரெய்னா 5000! – சிஎஸ்கே vs ஆர்சிபி மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்!

2019ம் ஆண்டு சீசனின் முதல் போட்டியை, நடப்பு சாம்பியன் சிஎஸ்கே வென்று, தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது.

நேற்று 70 ரன்கள் அடித்ததன் மூலம், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை, மீண்டும் ஒருமுறை சமன் செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பின்னர்கள் மட்டும் 8 விக்கெட்டுகளை அள்ளினர்.

ஹர்பஜன் – 3

இம்ரான் தாஹிர் – 3

ஜடேஜா – 2

பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் (29) தவிர, அந்த அணியின் வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 6 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 9 ரன்னிலும் வெளியேறினார்கள்.

‘சின்னத்தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-ல் 5000 ரன்களை முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 177வது ஆட்டத்தில் ஆடிய ரெய்னா, இச்சாதனையை புரிந்துள்ளார்.

விராட் கோலி, டி வில்லியர்ஸ், மொயின் அலி எனும் மூன்று அதிபயங்கர விக்கெட்டுகளை கைப்பற்றி, பெங்களூருவை படுக்க வைத்த ஹர்பஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

71 என்ற எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே, 17.4வது ஓவரில் தான் வெற்றிப் பெற்றது. அதுவும் மூன்று விக்கெட்டுகளை இழந்து.

மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், கடைசி வரை தோனி களமிறங்க வரவேயில்லை.

தல, தளபதி களத்தில் இருந்தாலும், அங்கே சூப்பர்ஸ்டார் யாராக இருக்க முடியும்? தலைவரே தான்!

போட்டியை நேரில் பார்க்க ரஜினியை கண்டதும் அதிர்ந்தது சேப்பாக் மைதானம்!.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Csk vs rcb best 10 moments rajinikanth dhoni

Best of Express