உண்மையில் தோனி இப்படித்தான் அவுட் ஆனாரா?

இதில், வென்றிருந்தால் பிளேஆஃப் சுற்றுக்கு புனே தகுதிப் பெற்றிருக்கலாம். ஆனால், நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில், டெல்லியில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில், டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 64 ரன்களும், ரிஷப் பண்ட் 36 ரன்களும் எடுத்தனர். புனே தரப்பில் ஸ்டோக்ஸ், உனட்கட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

குறைவான டார்கெட் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் புனே வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதில், வென்றிருந்தால் பிளேஆஃப் சுற்றுக்கு புனே தகுதிப் பெற்றிருக்கலாம். ஆனால், நடந்தது என்ன?

முதல் ஓவரின் முதல் பந்திலேயே புனேவின் தொடக்க வீரர் ரஹானேவை, ஜாஹீர் கான் போல்டாக்கினார்.இதையடுத்து, மற்றொரு தொடக்க வீரரும், அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான திரிபாதி 7 ரன்கள் அவுட்டாகி ஏமாற்றினார். இதையடுத்து கேப்டன் ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 33 ரன்னிலும் வெளியேற, ஒருபுறம் மனோஜ் திவாரி போராடிக் கொண்டிருந்தார். முடிவில், அவரையும் 60 ரன்களில் கம்மின்ஸ் போல்டாக்கினார்.

என்னடா இவன் தோனியை பற்றியே பேச மாட்டேங்குறான்னு நினைக்கிறீங்களா? என்னத்த சொல்ல…. தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்றால் நம்புவீர்களா? 5 ரன்கள் எடுத்திருந்த போது ஷமியினால் ரன் அவுட் செய்யப்பட்டார் தோனி. அப்புறம்…அப்புறமென்னா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து புனே தோற்றது.

இதனால், புனே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு நேற்று கிட்டவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், புனே வென்றாக வேண்டும். பஞ்சாபும் தனது பிளேஆஃப் சுற்றினை தக்கவைக்க இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close