India’s squad for Windies ODIs tamil. News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் பங்கேற்கிறது. ஜூலை 22ம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று மாலை அறிவித்துள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்துவார் என்றும் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் டி20 தொடருக்கு தயாராகி வரும் நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் டிரினிடாட் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை முதல் தொடங்கும் மூன்று டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இந்திய ஒருநாள் அணி பட்டியல் பின்வருமாறு:
ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப்.
#TeamIndia ODI squad:
— BCCI (@BCCI) July 6, 2022
Shikhar Dhawan (C), Ravindra Jadeja (VC), Ruturaj Gaikwad, Shubman Gill, Deepak Hooda, Suryakumar Yadav, Shreyas Iyer, Ishan Kishan (WK), Sanju Samson (WK), Shardul Thakur, Yuzvendra Chahal, Axar Patel, Avesh Khan, Prasidh Krishna, Mohd Siraj, Arshdeep Singh
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil