கேப்டன் இவருதான்.... ஆனா நான் 'மாஸ்' கிடையாது! இது 'தோனி' ஸ்பெஷல்

நடப்பு சாம்பியன்ஸ் தொடரில், நியூஸிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. அப்போட்டி தொடங்குவதற்கு முன், இந்திய வீரர்கள் அனைவரும் தோள் கோர்த்து நின்றுக் கொண்டிருக்க, துள்ளிக் குதித்து ஓடிவந்து, அணியின் குடிசைக்குள் தானும் ஐக்கியமானார் கேப்டன் விராட் கோலி.

அப்போது அந்த கேப்டனுக்கும் சேர்த்து ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? நம்ம தல தோனி. சிறுபிள்ளைகளாக அனைத்து வீரர்களும் கேட்டுக் கொண்டிருக்க, நமக்கோ ‘கெத்து தல’ ஃபீலிங் தான்.

‘தோனியின் சேவை அணிக்கு தேவை’ என்பதை பிசிசிஐ தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. ஏனெனில், வீரர்களுக்கு தோனி ஆலோசனை வழங்கும் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதே பிசிசிஐ தான்.

×Close
×Close