Cricket Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் சமகால விக்கெட் கீப்பர்களாக வலம் வரும் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கை பின்னிப்பிணைந்தது. பண்ட் இங்கிலாந்தில் 2018ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் தான் முதன்முதலில் இந்திய அணியில் அறிமுகமாகிறார். அதேசமயம், அந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்காததால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார் தினேஷ் கார்த்திக். தற்போது இந்திய அணியின் உலகக் கோப்பை கனவைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள இந்த இருவரும், அடுத்த இங்கிலாந்து டூரில் பேட்டிங்கில் 5, 3வது வரிசையில் களமாட காத்திருக்கிறார்கள்.
பண்ட் தினேஷ் கார்த்திக்கின் முன்னாள் ஐபிஎல் அணி ஒன்றில் தற்போது கேப்டனாக இருந்து வருகிறார். கார்த்திக்கும் ஒரு அணியில் கேப்டனாக இருந்து, அதிலிருந்து விலகி, ஒரு சாதாரண வீரராக களமாடினர். ஆனால், அவர் தனக்கான ஹோம் அணித் தேடலில் இருந்தார். அந்த கனவு, பெங்களூரு அணி அவரை 2022ம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் வாங்கியதன் மூலம் நிறைவேறியது. அத்துடன் அணியில் தனக்கான தேவையை உலகறியச் செய்த அவர், மீண்டும் ஒருமுறை தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்திருந்தார்.
இதன் மூலம் இந்திய அணிக்கும் கம் பேக்கும் கொடுத்திருந்தார். ஆனால், ஐபிஎல் அணியின் கேப்டனான பண்ட் நடப்பு சீசனில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இந்திய அணி வருகை டெஸ்டில் அவர் வெற்றிகரமான வீரர் என்பதை அறிந்து கொள்ள உதவியது. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் இந்திய அணி வருகை, டி-20 உலகக் கோப்பையை அணியில் பண்ட் இடம் பிடிக்க தடையாக இருக்கும் அளவிற்கு உள்ளது. மேலும், பண்டின் இந்திய அணி வாய்ப்பு சிறிது சிறிதாக பாதிக்கலாம் அல்லது பறிபோகலாம் என்று கூறிவிடும் அளவில் உள்ளது. ஆனால், அது நீங்கள் நினைக்கும் காரணங்களுக்காக அல்ல.
அவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர்களாக இருப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய அணியின் முதல் திட்டத்தில் (பிளான் எ), அவர்கள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு ரோல்களுக்கு போட்டியிடுகின்றனர். தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரை, சமீபத்திய ஆட்டங்களில் சிறந்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளார். எனவே, அவர் 14 வது ஓவருக்கு பிறகு களம் புகுந்தால் போதுமானது என்று அணி நிர்வாகம் நினைக்கிறது. மறுபுறம், பண்ட் இன்னிங்ஸின் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை சேர்க்க உதவு வேண்டும் என்று நினைக்கிறனர்.
முன்னதாக, பண்ட்டை அப்படி தொடக்க வீரராக களமிறக்க திட்டங்கள் இருந்தன. அதையே அவர் தனது ஜூனியர் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமாகச் செய்திருந்தார். ஆனால், அணியில் தற்போது பல டாப்-ஆர்டர் பேட்டர்கள் உள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது எளிதான விடயம் கிடையாது.
ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா மற்றொரு ஃபினிஷரை தேடிய நேரத்தில்தான் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணிக்கு கிடைக்கிறார்கள். தற்போது இந்தியா அதிரடி வீரர்கள், சுழல் மன்னர்கள், அதிவேக பந்துவீச்சாளர்கள், ஃபினிஷர்கள் என்கிற சிறந்த கலவையைக் கண்டறிந்துள்ளது. பாண்டியா, கார்த்திக் மற்றும் ரவீந்திர ஜடேஜா அல்லது அக்சர் படேல் போன்றோர் உறுதியான லோவர் மிடில் ஆர்டரை உருவாக்குகிறார்கள். எனவே பண்ட்டிற்கு அந்த ஃபால்பேக் விருப்பம் இல்லை. கார்த்திக் ஃபினிஷர் ரோலில் பொருந்தி போவது இந்திய அணிக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும், பண்ட் உள்ளிட்ட மற்ற மிடில் ஆர்டர் மற்றும் டாப் ஆடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட செய்தியாகவே உளள்து.
டாப் ஆடர் பேட்ஸ்மேன்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோரின் வரிசையை உங்களால் களையவோ அல்லது கைவைக்கவோ முடியாது. டி20 பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, மைதானத்திற்குள் முதலில் நுழையும் வீரராக கேஎல் ராகுல் இருக்கிறார். எனவே, இந்திய டாப் பேட்டிங் வரிசையில் ஒரே ஒரு இடம் தான் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு, பண்ட், சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் போன்றோர் போட்டியிடுகின்றனர். இந்த வீரர்கள் எதிர்வரும் தொடர்களில் ஜொலித்தாலும் தற்போதுள்ள அணி நிர்வாகம், அவர்களில் ஒருவருக்காக கார்த்திக்கை அணியில் இருந்து வெளியேற்றுவதை கற்பனை செய்வது கடினம்.
எனவே, பண்ட்டை பொறுத்தவரை, அந்த 4 நம்பர் ஸ்லாட்டுக்காக நிறைய கடினபப்பட வேண்டியிருக்கும். கீப்பிங் விஷயங்களில் அவர் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கிறார். அதை அவரது முந்தைய ரெக்கார்டுகள் பேசுகின்றன. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் சீசனில் கூட 30க்கு மேல் சராசரியை கொண்டிருந்தார். மேலும், 150க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த டாப் 10 வீரர்களில் பண்ட்டும் ஒருவர். ஆனால், இந்த 10 வீரர்களில் 8 வீரர்கள் 300 அல்லது அதற்கு மேல் ரன்களை குவித்திருந்தனர். ஒரு அரைசதம் கூட அடிக்காத பண்ட்டின் அதிகபட்ச ஸ்கோர் 44 ஆக இருந்தது இங்கு கவனிப்படுகிறது.
அதாவது, "அவரிடம் மேட்ச்-வின்னிங்" இன்னிங்ஸ் அல்லது வித்தை இல்லை. இந்த தரவுகள் அவரது குறிப்பிடத்தக்க ஆட்ட நிலைத்தன்மையை பரிந்துரைக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் 80 ரன்கள் எடுக்காவிட்டாலோ அல்லது சேஸிங்கை முடிக்காவிட்டாலோ, எதிரணியின் முக்கிய மிடில்-ஓவர் ஆயுதத்தை நீங்கள் வீழ்த்தாவிட்டாலோ, அந்த ஒரு ஓவர் யாருக்கும் நினைவிக்காது.
பண்ட் 30 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடிக்கும் ஸ்ட்ரைக்-ரேட் கொண்டுள்ளார். அவர் அதிரடியாக விளையாடி அவர் எந்த நேரத்திலும் ஆட்டமிழந்து வெளியேறலாம், இதிலிருந்து அவர் ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாட வேண்டும் என்றும் அவரது அணிகள் விரும்புகின்றன என்பது தெளிவாகிறது. மேலும் 13வது ஓவருக்குப் பிறகுதான் ஃபினிஷர் வருவார் என்பதை உறுதிசெய்திருக்கும் வரை, விரைவான ரன்களைத் தேடி அவர் வெளியேறினால் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்.
பண்ட்டுக்கு எதிராக விரிக்கப்படும் வைட் லைன் வலை தாமதமாக வேலை செய்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவர் அதை கவனிக்காமல் இருக்க மாட்டார். அவர் ராகுல் டிராவிட் மற்றும் பிற பயிற்சியாளர்களுடன் இணைந்து புதிய உத்தியை முயற்சி செய்வார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சர்வதேச தொடர், நிச்சயமாக, பண்ட்டிற்கு சிறப்பானதாக அமையவில்லை, ஆனால், அதற்காக அணி நிர்வாகம் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கப் போவதில்லை. ஏனென்றால், பண்ட் ஒரு இடது கை பேட்டராகவும் இருக்கிறார். அதனால், ரோகித், ராகுல் மற்றும் கோலியின் போன்ற முதல் மூன்று பேருடன் இந்திய அணி களமாடினால் அது அவருக்குச் சாதகமாக செயல்படும்.
இந்த மூன்று வீரர்களில் ரோகித், கோலி இருவரும் லெவன் அணியில் இடம் பெற வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்கிற விவாதம் குறித்து இன்னொரு நாள் பார்க்கலாம். ஆனால், உலகக் கோப்பையில் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலைகளும் அந்த நிலைமைகளில் அவர்களின் அனுபவமும் அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படும். எனினும், அவர்கள் வேகமான, பவுன்சர் ஆடுகளங்களில் பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் அணிகள் சீக்கிரமே நாக் அவுட் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படியானால், மிடில் ஓவர்களில் விரைவாக ஸ்கோர் செய்யாத ஒரே மாதிரியான இரண்டு பேட்டர்கள் எதற்கு? என்கிற கேள்வி எழுகிறது.
இதுபோன்ற பல கேள்விகளுக்கு கேப்டன் ரோகித்தும், பயிற்சியாளர் டிராவிட்டும் தான் முடிவு கொடுப்பார்கள். ஆனால் ரோகித் - கோலி ஜோடி தொடக்க வீரர்களாக இருந்தால், பேட்டிங் வரிசையில் அந்த இறுதி இடத்திற்கு பண்ட் மற்றும் சூர்யகுமார் இடையே போட்டி நிலவும் என்பது மட்டும் உறுதி. அவர்களில் ஒருவரை வெளியே உட்கார வைப்பது கடிமான ஒன்றாக இருக்கும். ஆனால், அணி ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஃபினிஷரைக் கண்டுபிடித்துள்ளது. எனவே, மிடில்-ஓவர்களில் சிறப்பாக ஆடும் ஒருவரை அணி டெத்-ஓவர்களில் களமிறக்க வாய்ப்புகள் குறைவு.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.