மூவர் ஐவராக மாறி உள்ளோம்… இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அப்பாவான தினேஷ் கார்த்திக்

Dinesh Karthik – Dipika Pallikal Blessed With Beautiful twin Baby Boys Tamil News: தினேஷ் கார்த்திக் – தீபிகா பலிக்கல் தம்பதியினருக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

Dinesh Karthik Tamil News: Dipika Pallikal DK Blessed With Beautiful twin Baby Boys

Dinesh Karthik Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். தற்போது தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பலிக்கல்லை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த தம்பதிக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இருவருமே ஆண் குழந்தைகள். குழந்தைகளுக்கு கபீர் பல்லிகள் கார்த்திக், ஸியான் பல்லிகள் கார்த்திக் என பெயரிட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கமால் தவித்து வந்த அவர் கடைசியாக 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dinesh karthik tamil news dipika pallikal dk blessed with beautiful twin baby boys

Next Story
‘ஹர்டிக் பாண்டியாவை அணியில் இருந்து தூக்க வாய்ப்பில்லை’ – கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து!T20 World Cup Tamil News: india’s Hardik Pandya will play against kiwis says tamil commentator pradeep muthu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com