‘டக்வொர்த் லூயிஸ்’ முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் மரணம் – பாகிஸ்தான் கையெடுத்து கும்பிடனும்!!

கணிதவியலாளர் டக்வொர்த் உடன் இணைந்து கிரிக்கெட்டில் இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் காலமானார். வயது 78. சர்ச்சைக்குரிய முறையாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இதற்கு இணையான ஒரு கணக்கீட்டு முறை இல்லை என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரது மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளது. டக்வொர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து டோனி லூயிஸ் என்பவர் 1997-ல் உருவாக்கியதுதான் டக்வொர்த் […]

Duckworth-Lewis rule, Tony Lewis dies aged 78
Duckworth-Lewis rule, Tony Lewis dies aged 78

கணிதவியலாளர் டக்வொர்த் உடன் இணைந்து கிரிக்கெட்டில் இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் காலமானார். வயது 78.

சர்ச்சைக்குரிய முறையாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இதற்கு இணையான ஒரு கணக்கீட்டு முறை இல்லை என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.


இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரது மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளது.

டக்வொர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து டோனி லூயிஸ் என்பவர் 1997-ல் உருவாக்கியதுதான் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது.

சமையல் கலைஞராக மயங்க்: கொரோனா உபயத்தால் வெளியே வரும் கிரிக்கெட் வீரர்களின் அசாத்திய திறமைகள்

இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 1999ம் ஆண்டு அதிகாரபூர்வமாக தனதாக்கிக் கொண்டு மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் கிரிக்கெட் ஆட்டங்கள் குறிப்பாக ஒருநாள், டி20 போட்டிகள் பாதிக்கப்படும் போது இந்த முறையைப் பயன்படுத்தி இலக்குகள் புதிதகா நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.


1992 உலகக்கோப்பையில் அரையிறுதியில் 13 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை வர பிறகு ஆட்டம் மீண்டு தொடங்கும் போது டி.எல் முறைப்படி 1 பந்தில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறிய கதையை அனைவரும் அறிவர், இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைய, இறுதிப் போட்டியில் இம்ரான் கான் கோப்பையை வென்றார். தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால், பாகிஸ்தானால் உலகக் கோப்பையை கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது.

இதனையடுத்தே ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பார் இந்தக் கணக்கீட்டினை மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Duckworth lewis rule tony lewis dies aged 78

Next Story
சமையல் கலைஞராக மயங்க்: கொரோனா உபயத்தால் வெளியே வரும் கிரிக்கெட் வீரர்களின் அசாத்திய திறமைகள்mayank agarwal, mayank agarwal chef, mayank agarwal lockdown, r ashwin, r ashwin lockdown, r ashwin coronavirus, coronavirus, covid 19, cricket news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com