இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த ஆட்டத்தில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித்திற்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரஹானே, தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரஹானே 62 ரன்களும், தவான் 87 ரன்களும் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து அவுட்டானார்கள்.
இதற்கடுத்து களமிறங்கிய யுவராஜ் 4 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்கள் ஆடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கிட்டு தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போட்டி துவங்குவதற்கு முன்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான டிவைன் பிராவோ இந்திய வீரர்களான தோனி, பாண்ட்யா மற்றும் ரிசப் பண்ட் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பிராவோ
June 2017
தனது டுவிட்டர் பக்கத்தில், "எனது 'மச்சான்' தோனியை பார்த்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி மற்றும் பிராவோ இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை(ஞாயிறு) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.