நெதர்லாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஈல்கோ ஸ்கட்டோரி. இந்திய கால்பந்து குறித்து இவருக்கு அறிமுகம் தேவையில்லை.இந்தியாவில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் பிரயாக் யுனிடேட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், ஈல்கோ எந்த ஐ.எஸ்.எல் அணியிலும் இல்லை. ஆனால் அவர் இந்திய கால்பந்தாட்டத்திலிருந்து விலகி இருக்கிறார் என்று அர்த்தமல்ல.
இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆய்வாளரான அவர், இந்திய கால்பந்தின் முன்னேற்றத்திற்காக ஒரு “கனவு திட்டத்தை” உருவாக்கியுள்ளார். இந்த திட்டம் கால்பந்து பகுப்பாய்வு மற்றும் வர்ணனைத் துறையில் புதிதாக இருப்பவர்களுக்கும் கற்பவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈல்கோ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்,
“இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் ஆர்வம் எனக்குத் தெரியும். இப்போது நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன, இது இந்திய கால்பந்து ஆட்டத்தை வடிவமைத்து சிறந்தவற்றை வெளிப்படுத்தும். மேலும் ஒரு பயிற்சியாளராக, எல்லா பிரிவுகளிலும் விளையாட்டை மிகவும் பகுப்பாய்வு ரீதியாக புரிந்துகொள்வது, அது வீரர், பயிற்சியாளர், மேலாண்மை அல்லது சாரணர்கள் என எந்தவொரு வளரும் கால்பந்து சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் ஒரு பெரிய பெரிய சொத்தாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். ”
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
“நான் இந்த திட்டத்தை இந்திய கால்பந்துக்காக உருவாக்கியுள்ளேன், இதனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுப்பாய்வு நுண்ணறிவு உள்ளது, இது விளையாட்டின் பெரிய படத்தைப் பெற அவர்களுக்கு உதவும். ஒரு கல்வி நிறுவனம் இந்திய முறைக்கு ஏற்ற ஒரு பாடமாக அதை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறது. இது போட்டி பகுப்பாய்விற்கான ஒரு விரிவான பாடமாகவும், அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். ”
இந்திய கால்பந்தில் ஒரு பாதையை உருவாக்குபவராக இருந்து வரும் ஈல்கோ ஸ்கட்டோரி, 2015 ஆம் ஆண்டில், ஈஸ்ட் பெங்கால் தலைமை பயிற்சியாளராக இருந்தார். தொடர்ந்து 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு யுனைடெட் மற்றும் ஐஎஸ்எல் தொடரில் கேரள பிளாஸ்டர்ஸின் ஒரு பகுதியாக இருந்தார்.
அவரது விளையாட்டு தத்துவம் மற்றும் ஆளுமை காரணமாக ஈல்கோ எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு விருப்பமாக உள்ளார். எப்போதும் ஒருவகை ஈடுபாட்டுடன் இருக்கும் அவர், ஒரு நேர்மறையான விளையாட்டு பாணியை வழங்கியுள்ளார். இது அவருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே ஒரு தனித்துவமான பிணைப்பை உருவாக்கியுள்ளது. அவரது புதிய திட்டம் - கேம் - இப்போது தயாராக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"