ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கிறது.
இதற்கு முன்னதாக, இரு பயிற்சிப் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இதன் முதல் போட்டி, இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியா XI அணிக்கும் இடையே கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாள் டெஸ்ட் போட்டியான இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதன் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்க் ஸ்டோன்மேன் 61 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 58 ரன்களும், டேவிட் மலன் 63 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா XI அணி, 9 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 60 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதிலும், ஸ்டோன்மேன் 51 ரன்கள் எடுத்தார்.
இதனால், 267 ரன்கள் இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய XI அணி, வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது. இரண்டே இரண்டு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்கை தொட்டனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், கிரெய்க் ஓவர்டன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 10 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஸ்விங், யார்கர்,பவுன்சர் என பல்வேறு மாடுலேஷனில் பந்து வீசி அசத்தினர்.
அவரது பந்தை தொடுவதற்கே ஆஸி., XI அணி பேட்ஸ்மேன்கள் பயந்தனர். குறிப்பாக, ஆண்டர்சனின் லைன் அன்ட் லென்த் மிகவும் அக்யூரேட்டாக இருந்ததால், பேட்டிங் செய்வதற்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இப்போட்டியை கூர்ந்து நோக்கிய ஆஸ்திரேலிய மெயின் அணி வீரர்கள், இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சால் சற்று கலக்கத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் பிரதான பவுலர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், சில பிட்ச்சை சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம் என ஆஸி., நிர்வாகம் யோசித்து வருவதாக தெரிகிறது.
ஏனெனில், ஆஸ்திரேலிய பிட்ச்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகளை, ஆஸி., மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி வீழ்த்திவிடலாம். ஆனால், இங்கிலாந்து அணியை ஆஸி., மண்ணில் வீழ்த்துவது என்பது ஆஸி., அணிக்கே சவாலான விஷயம் தான்.
இந்த ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் என்பது கூடுதல் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.