கிரிக்கெட் பார்ப்பதென்றாலே சுவாரஸ்யம்தான். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டின் போது, நடக்கும் சில சம்பவங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாததாக அமைந்துவிடும். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மகேந்திர சிங் அடித்த வின்னிங் சிக்ஸ் மற்றும் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை தெறிக்க விட்ட யுவராஜ் சிங் போன்ற சம்பவங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்ணுக்குள்ளேயே நிலைத்து நிற்கும் சம்பவங்கள்.
Advertisment
இதேபோல, ஐபிஎல் தொடரின் போது ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங் இடையே நடைபெற்ற மோதல் என கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாமல், அவ்வப்போது அரங்கேறும் சம்பவங்களும் மறக்க முடியாததாக அமைந்துவிடும்.
அந்த வகையில், 1999-ம் ஆண்டு வெஸ்ட் இன்டீஸ் மற்றும் தென் ஆப்ரிக்காக இடையிலான தொடரின் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இரு அணிகளுக்கும் இடையே டர்பனில் 3-வது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில், வெஸ்ட் இன்டீஸ் பந்து வீச்சாளர் பந்து வீசவே, தென் ஆப்ரிக்க வீரர் டேரல் கள்ளினன், பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
Advertisment
Advertisements
அப்போது, டேரல் கள்ளினன் அடிந்த பந்து தரையில் பட்டு துள்ளிக் குதித்து மேலே எழும்பியது. இதனை எந்தவித தயக்கமும் இல்லாமல் சட்டென பிடித்த பேட்டிங் செய்த டேரல் கள்ளினன், பின்னர் சற்று யோசித்துவிட்டு பந்து வீச்சாளரிடமே பந்தை வீசினார்.
அவர் பிடித்த பந்து ஸ்டெம்பை நோக்கி செல்வது போன்று தெரியவில்லை. எனினும், வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் பிரையன் லாரா அம்பையர் டேவிட் ஆர்சர்டிடம் அப்பீல் செய்ததையடுத்து, அம்பையரும் டேரல் கள்ளினனுக்கு அவுட் கொடுத்துவிட்டார்.
நடுவர் டேவிட் கிரிக்கெட் விதி 33-யை பயன்படுத்தி டேரல் கள்ளினனுக்கு அவுட் கொடுத்திருக்கிறார். அந்த விதியில் கூறப்பட்டிருப்பதாவது: விளையாட்டின் போது எதிரணியினரின் ஒப்புதல் இல்லாமல், பந்தை பேட்ஸ்மேன் ஒருவர் தானாக முன்வந்து கையால் பிடிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் பந்தை கையால் பிடித்து அவுட் ஆன இரண்டாவது வீரர் டேரல் கள்ளினன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1986-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் தான், இந்த முறையில் அவுட் ஆன முதல் வீரர் ஆவார்.
அப்போது ஆஸ்திரேலிய வீரர் வீசிய பந்து, மொகிந்தர் அமர்நாத்தின் பேட்டில் பட்டு ஸ்டெம்புக்கு சென்றது. அப்போது, பதட்டமடைந்த அமர்நாத் பந்தை கையால் தட்டிவிடவே, எதிரணியினர் நடுவரிடம் அப்பீல் செய்தனர். ஆனால், மொகிந்தர் அமர்நாத்தோ நடுவரை கூட பார்க்காமல் தவறை உணர்ந்து, அப்படியே பெவிலியனை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்.