Advertisment

உலகின் டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்… நம்ம ஆளுங்க இருக்காங்களா?

Top 5 fastest bowlers in cricket history Tamil News: ஆட்டம் தொடங்கும் போது, திறன்படைத்த பேட்ஸ்மேன்களை தங்களது வேகப்பந்தில் கலங்கடிப்பவர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fastest Bowlers in Cricket History Tamil News

fastest bowlers in the world Tamil News

5 Fastest Bowlers of All Time Tamil News: கிரிக்கெட் பல ஆண்டுகளாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டாக இருந்து வருகிறது. சமீப காலமாக அதன் புகழ் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்த பிரபல விளையாட்டில் களமாடும் வீரர்களை, பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர், பந்துவீச்சாளர்கள் என மூன்று வகையினாராக பிரிக்கிறார்கள். அவர்களில் அணியின் முக்கிய அரணாக இருக்கும் திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

கிரிக்கெட் ஆட்டத்தில் எந்தவொரு வீரராலும் திருப்பு முனையை ஏற்படுத்த முடியும். ஆனால், ஆட்டம் தொடங்கும் போது, திறன்படைத்த பேட்ஸ்மேன்களை தங்களது வேகப்பந்தில் கலங்கடிப்பவர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். அவர்கள் விரிக்கும் மாயா வலைகளாக இன்-ஸ்விங், அவுட் -ஸ்விங், பவுன்ஸ், ஷார்ட் பால் போன்றவை உள்ளன. மேலும், அணியின் ரன்களை கட்டுப்படுத்துவதும், வாரிக்கொடுப்பவதும் இந்த மாவீரர்கள் கையில் தான் இருக்கிறது.

அவ்வகையில், தங்களின் அசத்தியா வேகத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து பயம் காட்டிய, கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த 5 அதிவேக பந்து வீச்சாளர்களைப் பற்றி இப்போது பார்ப்போம்

ஷோயப் அக்தர்

publive-image

அதிவேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பவர் 'டான்', 'டைகர்', 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' எனப் பல்வேறு புனைபெயர்களால் அழைக்கப்படும் ஷோயப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 1997 ஆம் ஆண்டு அறிமுகமான இவர், மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார். அவரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 161 கி/மீ ஆகும்.

publive-image

பவுன்சர்களுக்கு பெயர்போன இவர் அதன் மூலம் தனது பந்தை விரட்ட நினைக்கும் ஒவ்வொரு வீரரையும் மிரளச் செய்வார். மேலும், சீறி வரும் அவரது வேகப்பந்து மூலம் பல பேட்ஸ்மேன்களை நிலைகுலையைச் செய்துவிடுவார். ஆனால், ஒரு வேகப்பந்து வீச்சாளராக அக்தர் தனது முழுத் திறனையும் வெளிக்கொணரவில்லை என்கிற கருத்துக்கள் இருந்தன. எனினும், அந்த உண்மையை மறுக்காத சோயிப் அக்தர் கிரிக்கெட் வரலாற்றில் உலகின் அதிவேக பந்துவீச்சாளர் தான் என்பதை பல ஆட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரட் லீ

publive-image

கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்துகளை அதிவேகமாக வீசும் பந்துவீச்சாளர்களில் ஒருவராக பிரட் லீ இருந்தார். அவரது எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். சராசரியாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துகளை வீசக்கூடிய இவர், அவ்வப்போது 160 கிமீ வேகத்தை தொடக்கூடியவராகவும் இருந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மணிக்கு 161 கிமீ வேகத்தில் பந்துகளை வீசி, தனது இரண்டாவது வேகமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

publive-image

லீ ஆஸ்திரேலியாக அணிக்காக 3 ஃபார்மெட்டுகளிலும் ஒரு வல்லமைமிக்க பந்துவீச்சாளராக இருந்தார். அதிலும் குறிப்பாக டி-20 கிரிக்கெட்டில் ஆபத்தான பந்துவீச்சாளராக வலம் வந்தார். அவரின் யார்க்கர் பந்துகளை சந்திக்க பலரின் தொடை நடுக்கும். டெத் ஓவர்களில் யார்க்கர்களை வீசுவதில் அவர் கில்லாடி. அதை அவர் சரியாக வீசினார் என்றால், பேட்ஸ்மேன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதான். லீ தனது புகழின் உச்சத்தில் இருந்த காலங்களில், உலகின் மிகவும் அஞ்சப்படும் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.

ஷான் டைட்

publive-image

கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக ஷான் டைட் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2005 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறன் படைத்தவர். அவரின் துல்லியமான பந்துவீச்சு பல பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை பதம் பார்த்துள்ளது.

publive-image

ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடிய இவர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் உள்நாட்டு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் வேகமான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இவரது பந்துவீச்சுக்கு என இவரின் பெயர் அடிக்கடி ஒப்பிடப்படும்.

publive-image

டைட்டனின் அசாத்திய பந்துவீச்சுக்காக அவரை எக்ஸ்பிரஸ் ரயில் என்றும் அழைப்பார்கள். அவர் சராசரியாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர். அவரின் அதிகபட்ச வேகமாக, அவர் மணிக்கு 161.0 கி.மீ வேகத்தில் வீசியது உள்ளது. தற்போது டைட் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

publive-image

ஷேன் பாண்ட்

publive-image

நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் பாண்ட், சிறந்த 10 வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடிக்கும் பந்துவீச்சாளர்களில் ஒருவர். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ள இவரது வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். நியூசிலாந்து அணிக்காக கடந்த 2001 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் 2002ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 2009 இல் விளையாடினார். 2010 ஆம் ஆண்டில் அவர் அனைத்து ஃபார்மெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

publive-image

ஷேன் பாண்ட், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த அதிவேக பந்துவீச்சாளராக வலம் வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து பந்துவீச்சாளர்களிலும் இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக்கர் ரேட்டைக் கொண்டுள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தம் 259 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், மூன்று ஃபார்மெட்டுகளிலும் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளராகவும் இவர் இருக்கிறார்.

முகமது சமி

publive-image

கிரிக்கெட் உலகில் மணிக்கு 150 கிமீ வேகத்திற்கு மேல் பந்துகளை வீசும் சில பந்து வீச்சாளர்களில் முகமது சமியும் ஒருவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 2001 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர், தனது அசத்தலான வேகத்தால், முதல் ஆட்டத்திலே சர்வதேச அரங்கில் கவனம் ஈர்த்தார். அதிலும் தனது 'ரா ஸ்பீட்' மூலம் பேட்ஸ்மேன்களுக்குப் பின்புறம் இருக்கும் ஸ்டம்ப் குச்சிகளை பறக்கவிட்டார்.

publive-image

சமி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக பல ஆண்டுகளாக இருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில், அவர் சக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தருடன் அடிக்கடி ஒப்பிடப்பட்டார். ஏன்னென்றால், இரண்டு பந்து வீச்சாளர்களும் ஒரே மாதிரியான உருவாக்கம் மற்றும் பந்துவீச்சு ஆக்சன் போன்றவற்றை பகிர்ந்து கொண்டனர். மேலும், இருவரும் மணிக்கு 150 கி.மீ.-க்கு மேல் வீசக்கூடிய வேகபந்துவீச்சாளர்களாகவும் இருந்தனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Shoaib Akhtar Brett Lee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment