இலங்கை அணியை முதன் முதலாக அந்நாட்டு மண்ணிலேயே கிளீன் ஸ்வீப் செய்து சாதனை படைத்திருக்கும் இந்திய அணி அடுத்ததாக சவால் நிறைந்த இரு அதிரடி தொடர்களை எதிர்கொள்கிறது. இதில் முதல் சவாலாக ஆஸ்திரேலிய அணியை இந்தியா சந்திக்கிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் என அதிரடி ஆட்டங்களுக்கும், அசத்தல் சதங்களுக்கும் பஞ்சம் இல்லாத இந்தத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் இரு அணிகளும் மோதும் ஒரேயொரு பயிற்சி ஆட்டம் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அதன் பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சென்னையில் வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஒருநாள் போட்டி அக்டோபர் 1-ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது. பின் 7-ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முழு அட்டவணை:
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z232-300x217.jpg)
இந்தியா - ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்திற்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராகுல் திரிபாதி, மாயன்க் அகர்வால், ஷிவம் சௌத்ரி, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ராணா, கோவிந்த் போடர், குர்கீரத் சிங் (கேப்டன்), ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ரஹில் ஷா, அக்ஷய் கர்னேவர், குல்வந்த் கெஜ்ரோலியா, குஷங் படேல், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - நியூசிலாந்து அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான முழு அட்டவணை:
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z233-300x217.jpg)
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் மொத்தம் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலிய மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
காலை 11 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1,200-லிருந்து ரூ.8000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.bookmyshow என்ற தளத்திலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு டிக்கெட் மட்டும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.