இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் சர்வதேச சதுரங்க போட்டியானது வரும் 28ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்டு மதம் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியானது சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகியவை சந்திக்கும் புள்ளியில் அமைந்திருக்கும் பூஞ்சேரி கிராமத்தில் நடக்கவிருக்கிறது.
இந்த போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
44வது செஸ் ஒலிம்பிட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னை வர தொடங்கி உள்ளனர். வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய 5 நாடுகளில் இருந்து 6 செஸ் வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அவர்களை, தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்று, ஒட்டல்களுக்கு அழைத்து சென்றனர். அப்போது இந்தியாவில் நடைபெறும் இந்த சர்வதேச செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil