அனில் கும்ளேவிற்கு 47-வது பர்த்டே... வாழ்த்துகள் சொல்லிய பிரபலங்கள்!

சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ளேவிற்கு இன்று 47-வது பர்த்டே

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ளேவிற்கு இன்று 47-வது பிறந்தநாள். இதனையொட்டி, கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்களின் அனில் கும்ளேவும் ஒருவர். 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அனில் கும்ளே. ஒருநாள் போட்டிகளில் 619 விக்கெட்டுகளும், டெஸ்ட்போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்.

10 விக்கெட்டுகளையும் ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அனில் கும்ளே தான். கடந்த 2007-ம் ஆண்டு அனில் கும்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 37-வயது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார் அனில் கும்ளே. எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் தான் இருந்து வருகிறார்.

கொல்கத்தா கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். அனில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை உள்ளூரில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றது. பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்து வரும் அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் குறிபிட்டுள்ளார்.

வீரேந்திர சேவாக்கின் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ரோகித் ஷர்மாவின் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்திற்கு உதவிய ஜாம்பவான்களில் ஒருவரான அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பதிவில், ஏராளமானோருக்கு உத்வேகம் அளித்து ரோல் மாடலாக திகழுமூ அனில் கும்ளேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

விவிஎஸ் லக்‌ஷ்மன் பதிவிட்டுள்ளதாவது: மிகச்சிறந்த மேட்ச் வின்னருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முகமது கைஃப் பதிவிட்டுள்ளதாவது, உங்களின் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் அனில் கும்ளே என பதிவிட்டுள்ளார்.

இதேபோல, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் உளிட்ட பலர் அனில் கும்ளேவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close