'எழு, நொறுக்கு, சுருட்டு, கொண்டாடு'! - கங்குலிக்கு இப்படி யாரும் பர்த்டே விஷ் சொல்ல முடியாது!

பவுலர்களை நொறுக்குங்கள் & அவ்வப்போது பார்வையாளர்களையும் நொறுக்குங்கள்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு… ‘தாதா’

இப்படி கெத்தாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள சவுரவ் கங்குலியை தவிர வேறு யாருக்கு தகுதி இருக்க முடியும்!. சச்சின் எனும் பிரம்மாண்டம் கோலோச்சிய காலத்தில், ‘சச்சின் இல்லனா கங்குலி’ என்று ரசிகர்களை சொல்ல வைத்தவர். சூதாட்ட புகாரில் சிக்கி சில இந்திய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, இந்திய அணி அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் ஏராளம். யாரை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்ற தலைவலி நீடிக்க, தைரியமாக முன்னெடுத்து நின்றவர் கங்குலி.

கதிகலங்கி நின்ற அணியை கட்டமைத்து சேவாக், ஜாகீர், தோனி என பல புதுமுகங்களை இந்திய அணிக்குள் கொண்டுவந்து, தள்ளாடிக் கொண்டிருந்த பேஸ்மென்ட்டை சரி செய்தவர் கங்குலி. தோனியை கேப்டனாக்க சச்சின் பரிந்துரை செய்தார் என்பது செவி வழிச் செய்தி. ஆனால், யாருக்குமே அன்று தெரியாத தோனி எனும் புதுமுகத்தை பாகிஸ்தானிற்கு எதிராக ஒன்டவுன் இறக்கிவிட்டு, தோனியின் வாழ்க்கைக்கு ஒளி பாய்ச்சியது என்னவோ கங்குலி தான். இது வரலாறு.

அப்படிப்பட்ட நமது தாதா கங்குலிக்கு இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்று ‘தல’ தோனி பர்த்டே… இன்று ‘தாதா’ கங்குலி பர்த்டே… (ஜூலை மந்த் பேபீஸ் பொறாமைப் பட வேண்டாம்).

சரி விஷயத்திற்கு வருவோம்.. நேற்று தோனி பிறந்தநாளுக்கு ஒரு அற்புதமான ட்வீட் போட்டு 100K லைக்சை ட்விட்டரில் அள்ளிய சேவாக், இன்று கங்குலியின் பிறந்தநாளிற்கு அதைவிட பயங்கரமான வாழ்த்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஸ்டெப் 1 – எழுங்கள், உங்கள் கண்களை இருமுறை சிமிட்டிக் கொண்டு & களத்தில் இறங்கி ஆடுங்கள்.

ஸ்டெப் 2 – பவுலர்களை நொறுக்குங்கள் & அவ்வப்போது பார்வையாளர்களையும் நொறுக்குங்கள். (வன்முறை நோக்கம் இல்லை).

ஸ்டெப் 3 – பந்தை மட்டும் ஸ்விங் செய்ய கூடாது, உங்கள் முடியை கூடத் தான்.

ஸ்டெப் 4 – யாரும் இதுவரை பார்த்திராத வகையில் கொண்டாடுங்கள்.

என மேலே கங்குலிக்கு தொடர்புடைய நான்கு படங்களை பதிவிட்டு, அற்புதமான மனிதர் சவுரவ் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார் சேவாக். (இதெல்லாம் இவருக்கு யார் சொல்லித் தரா!?)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close