/tamil-ie/media/media_files/uploads/2017/06/A600.jpg)
நடந்து முடிந்த பாகிஸ்தானிற்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா அடைந்த தோல்வியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போட்டியில் தோற்றத்தைவிட, எந்தவித ஆக்ரோஷமும் காட்டாமல், குறைந்தபட்சம் தாங்கள் அவுட் ஆனதற்கு வருத்தம் கூட அடையாமல், எந்தவித சலனமுமின்றி இந்திய வீரர்கள் இருந்ததுதான் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு கொண்டுச் சென்றது.
இந்தச் சூழ்நிலையில் களமிறங்கி ஆறு சிக்ஸர்களை தெறிக்கவிட்டு, 43 பந்துகளில் 76 ரன்கள் விளாசி, ரசிகர்கள் மனதில் ஹீரோவாகவே ஆகிவிட்டார் ஹர்திக் பாண்ட்யா. அதிலும், அவர் அடித்த சிக்ஸர்கள் ஒவ்வொன்றிலும், தோற்கப் போகிறோமே என்ற ஆத்திரம் இருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக, ரன் அவுட் ஆன பின் அவர் திட்டிக் கொண்டே சென்றது, ரசிகர்களுக்கு அவரது மீதிருந்த ஹீரோயிசத்தை மேலும் அதிகப்படுத்தியது. அந்த தோல்வியில், ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் அதுதான்.
அதேசமயம், நாம் ஷிகர் தவானையும் மறந்துவிடக் கூடாது. இந்தத் தொடரில் விளையாடிய அனைத்து போட்டியிலும், கொஞ்சமும் பயமின்றி, அனைத்து அணியின் பவுலர்களையும் அசால்டாக கதறவிட்டார்.
இந்நிலையில், இந்தியா தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. இதற்கான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் கிளம்பிய போது, இந்த இரு சிங்கங்களும் எடுத்துக் கொண்ட செல்ஃபி இதோ.
சாம்பியன்ஸ் தொடர் ஆடிய வீரர்களில் ரோஹித் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கேப்டனாக செயல்பட, இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் அணியில் இணைந்துள்ளனர்.
Going to London with this champ@kuldeep18 to join the team pic.twitter.com/DR40TlOBCR
— Rishab Pant (@RishabPant777) 19 June 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.