வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்ட்யாவும், பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் காதலிப்பதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதற்கு இருவரும் அனுப்பிய ட்வீட்கள் தான் காரணம்.
முதன்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சைக்கிள் படம் ஒன்றை பதிவிட்டு "மிகவும் அருமையான பார்ட்னருடன் ஒரு கச்சிதமான ட்ரிப்' என்று யாரையும் டேக் செய்யாமல் பொதுவாக ஒரு ட்வீட் செய்திருந்தார் பரினீதி.
இதற்கு பதில் ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா, "அது யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா? அது கிரிக்கெட் தொடர்புடைய அல்லது இரண்டாவது பாலிவுட் ஆளாக இருக்கலாம் என நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அனுப்பிய பரினீதி, "அப்படியும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால், நான் பதிவு செய்திருந்த படத்திலேயே அதற்கான க்ளூ உள்ளது" என்று தெரிவித்தார்.
இருவரின் இந்த ட்வீட்களை பார்த்த வட இந்திய நெட்டிசன்கள், ஹர்திக் பாண்ட்யாவும், பரினீதி சோப்ராவும் காதலிப்பதாக நினைத்துக் கொண்டு பாண்ட்யாவிற்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர். 'கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துங்கள்' , 'இது போன்ற செயல்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டாம், 'காதலில் ஆர்வம் செலுத்தினால் கிரிக்கெட்டில் நீங்கள் சம்பாதித்த பெயரை இழக்க நேரிடும்' என்கிற ரேஞ்சில் அட்வைஸ் சொல்லத் தொடங்கிவிட்டனர். (அவங்களுக்கு விராட் கோலி கண்ணுக்கு தெரியல போல)
இதன்பின் இந்த விஷயம் குறித்து ஒரு வீடியோ மூலம் தன்னிலை விளக்கம் அளித்து, அனைத்து வதந்திகளுக்கும் ஒரு பெரிய மொக்கை கொடுத்தார் பரினீதி. அதாவது, "எனது கச்சிதமான பார்ட்னர் புதிய 'க்சியாமி இந்தியா' மொபைல் ஃபோன் தான்" என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z245-300x217.jpg)
மேலும், புதிதாக அறிமுகமாகவுள்ள இந்த க்சியாமி மொபைலை ஃ பிளிப்கார்டில் எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்தும் பாடம் எடுத்தார்.
என்னடா இது! ஒரு விஷயத்திற்கு ஆர்வமாக அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா இவ்ளோ மொக்கையா போச்சே என்று நொந்துக் கொண்டனர் வட இந்திய நெட்டிசன்கள்.
தற்போது ஹர்திக்கும் இந்த காதல் வதந்தி குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இது குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னிடம் எந்த விடையும் இல்லை. பரினீதியை பற்றி உண்மையில் எனக்கு அதிகம் தெரியாது. இதற்கு முறை நாங்கள் பேசிக் கொண்டது கூட கிடையாது. பார்த்ததும் இல்லை. ஆனால், ட்விட்டரில் பலர் இதுகுறித்து விமர்சிக்கையில், எங்கிருந்து இந்த விஷயம் ஆரம்பித்தது என்பதை நான் ஆராய்ந்தேன்.
அதன்பின், ஒரு ஃபோன் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட விஷயம் இது என்று தெரிந்தவுடன் சிரித்துக் கொண்டேன். நான் ஒரு மகிழ்ச்சியான ஆன்மா. இதையும் நான் மகிச்சியுடன் பார்க்கிறேன்" என்றார் ஜாலியாக.