டெல்லியில் நேற்று நடந்த நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம், முதன்முதலாக சர்வதேச டி20 போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது.
ரோஹித், தவானின் அதிரடி ஆட்டம், ஷ்ரேயாஸ் ஐயரின் ஃபீல்டிங் சொதப்பலுக்கு வீரர்கள் சிரிப்பு, 19 ஆண்டுகளாக விளையாடி வரும் நெஹ்ராவின் ஓய்வு, இப்படி காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என விஜய் படம் போன்ற பக்கா கமர்ஷியல் கிரிக்கெட் போட்டியாக இது அமைந்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதனால், கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசி., அணியின் ஆபத்தான தொடக்க வீரர் மார்டின் கப்தில், இந்திய வீரர்களின் பவுலிங்கை அடிக்க முடியாமல் திணறினார்.
அப்போது சாஹல் வீசிய ஓவரில், சிக்ஸ் அடிக்க நினைத்த கப்தில், மிடில் ஸ்டெம்பை நோக்கி வந்த பந்தை நேராக சிக்ஸருக்கு தூக்கினார். உடனே, லாங் ஆஃபில் நின்றுக் கொண்டிருந்த பாண்ட்யா, சரியான வேகத்தில் ஓடி வந்து, மிகவும் அற்புதமாக டைவ் அடித்து அதை கேட்ச் ஆக்கினார்.
பாண்ட்யாவின் இந்த கேட்ச்சை பார்த்த விக்கெட் கீப்பர் தோனி, கேப்டன் கோலி உட்பட அனைத்து வீரர்களும் ஒருகணம் அதிர்ந்துவிட்டனர். சமீபகால கிரிக்கெட்டில் இப்படியொரு கேட்ச்சை பார்த்ததாக நினைவில்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு ஒரு பிரமிப்பான கேட்ச்சாக இது அமைந்தது. அந்த வீடியோ இங்கே,
Whatta catch by @hardikpandya7 !!!! pic.twitter.com/XzWQcUhzOj
— Anand Katakam (@anandkatakam) 1 November 2017