'டக்குன்னு வளரல; மேடு பள்ள பயணத்தில் ஜெயித்து இங்க வந்திருக்கேன்' - வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா ஃபோட்டோ

இந்திய அணியின் ‘ராக் ஸ்டார்’ யார் என்றால் டக்குனு சொல்லும் சமூகம் இன்று உருவாகிவிட்டது. அது ‘ஹர்திக் பாண்ட்யா’ என்று. மாஸ், ரேஜ், டெப்த் என்று இந்திய அணியின் மசாலா அபிவிருத்தியாக வலம் வருகிறார் ஹர்திக்.


இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று, ‘நானும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிப்பேன்’ என்பவர்களுக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது.

தனது இளம் வயதில், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க லாரியில் தான் பயணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். #majorthrowback எனும் ஹேஷ்டேக்குடன் தனது புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக், கிரிக்கெட் மீதான தனது காதல், ஆர்வம் எந்தளவுக்கு இருந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாஸிட்டிவிட்டி, எனர்ஜி, மெர்சல் கலந்த இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆக்காமல் இருப்பர்களா என்ன…?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close