பெங்களூரில் நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில், முதல் நாளான இன்று, சென்னை அணி ஆறு வீரர்களை வாங்கியுள்ளது.
1) மும்பை அணிக்காக இதுவரை விளையாடி வந்த ஹர்பஜன் சிங்கை, 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
2) பெங்களூரு அணியில் ஆடி வந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை 4 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. பெங்களூரு அணி வாட்சனுக்காக RTM உபயோகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆர்சிபி நிர்வாகம் அதனை பயன்படுத்தவில்லை.
3) மற்றொரு பெங்களூரு அணி வீரரான கேதர் ஜாதவை, கடும் போட்டிக்கு பிறகு 7.80 கோடி கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
4) தென்னாப்பிரிக்காவின் டு பிளசிஸ்-ஐ 'RTM' பயன்படுத்தி 1.60 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்தது.
5) சென்னை அணியின் மற்றொரு பேவரைட் வீரரும், தோனியும் நெருங்கிய நண்பருமான டுவைன் பிராவோ 'RTM' மூலம் மீண்டும் சென்னை அணிக்காக 6.40 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
6) மும்பை வீரரான அம்பதி ராயுடுவை சென்னை அணி 2.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
7) தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. விக்கெட எடுத்துவிட்டால், கிரவுண்டையே ஒரு சுத்து சுத்துவாரே! அவரே தான்..! இவரை 1 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. தொகையை பொறுத்தவரை சென்னைக்கு இது லக் தான். மிகத் திறமையான வீரர் இம்ரான் தாஹிர்.
8) கர்ண் ஷர்மாவை ஐந்து கோடிக்கு சென்னை வாங்கியுள்ளது. முதல் நாளான இன்று, சென்னை அணி வாங்கிய கடைசி வீரர் இவர் தான்.
ஆல் சென்னை ஃபேன்ஸிற்கும் 'ஹேப்பி அண்ணாச்சி' மூட் தான். அஷ்வினை விட்டுவிட்டோமே என்ற ஒன்றைத் தவிர!.