Rohit Sharma Tamil News: இந்திய கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பில் 'விராட் கோலி' விலகியதையடுத்து, மூத்த வீரர் ரோகித் சர்மா இரு அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் தனது கேப்டன் பதவியை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடிய கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்விகண்டது. இதனால், இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் கேப்டனாக பணியை தொடர இருந்த ரோகித் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதோடு, காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் ரோகித் தனது ஃபார்மிற்கு மீண்டும் திரும்புவாரா? ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி வருவது போல் இந்திய அணியை அவர் வழிநடத்துவாரா? அவருடை இந்திய அணியில் யாரரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது? என பல கோணங்களில் விவாதிக்கப்பட்டது. தவிர, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 1000வது ஒருநாள் போட்டியில் அணியின் வெற்றியை உறுதி செய்வாரா ரோகித்? என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.
இந்த விவாதங்கள் மற்றும் கேள்விகளுக்கு ரோகித் அவரது ஸ்டைலிலே பதில் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். நேற்றைய ஆட்டத்தில் அவரது தலைமையிலான இந்திய ஒருநாள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அபார வெற்றி பெற்றது. அதோடு, 1000வது ஒருநாள் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும் கண்டது.
மீண்டும் ஃபாமிற்கு திரும்பி ரோகித்
இந்த ஆட்டத்தில் வழக்கம் போல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் 51 பந்துகளில் 1 சிக்ஸர் 10 பவுண்டரிகள் என அதிரடி துவக்கம் கொடுத்து அரைசதம் கடந்திருந்தார். "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று கூறும் காபலி ரஜினியை போல் வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பவுலிங்கையும் நொறுக்கியும் இருந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக, அவர் 60 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.
எனினும், வேகம் மற்றும் சுழலால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பயம் காட்டிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு ரோகித் தனது அதிரடியால் பயம் காட்டியிருந்தார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கெமர் ரோச் வீசிய வேகப்பந்துகளுக்கு தனது பாணியில் பவுண்டரி, சிக்ஸர் என சிதறவிட்டார். அதிலும் அவர் ஸ்டேப்-அவுட் செய்து மிட்-விக்கெட் திசையில் அலட்சியமாக அடித்தது காண்போரின் கண்களுக்கு விருந்து படைத்தது. தவிர, ரோகித்திற்கு வெஸ்ட் இண்டீஸின் ரோச் மற்றும் அல்சாரி ஜோசப் தொடுத்த தாக்குல்கள், அவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை என்பது அவரது அதிரடியான பேட்டிங்கில் வெளிப்பட்டது.
Well played, Rohit Sharma - 60 runs from 51 balls including 10 fours and 1 six - first match as full time ODI captain and put a great show. pic.twitter.com/IlmLM94npx
— Johns. (@CricCrazyJohns) February 6, 2022
ரோகித்தின் கேப்டன்சி எப்படி இருந்தது?
அடுத்த ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 18 மாதங்களுக்கும் மேலாக உள்ள நிலையில், புள்ளி அடிப்படையில் முன்னேற ஒவ்வொரு அணிகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், இந்தியா அதன் நட்சத்திர கேப்டனான விராட் கோலியை கழற்றி விட்டது. பிறகு அந்த இடத்திற்கு அவரைப்போல் ஒரு நட்சத்திர வீரரை நியமித்து இருக்கிறது.
இதன்படி, கேப்டனாக பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள நட்சத்திர வீரர் ரோகித்துக்கு முன் ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன. அவர் ஒரு போட்டியில் அல்லது ஒரு தொடரில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதன் மூலம் அவரின் செயல்பாடுகள் குறித்து எடையிட முடியாது. ஆனால், ஒரு போட்டியில் அவரின் வழிநடத்தும் பாணி எப்படி இருந்தது என்பது பற்றி பேசப்படலாம்.
நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அவர் இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்தி இருந்தார். குறிப்பாக முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் அதிகம் உரையாடினார். ஃபீல்டிங் செட் செய்வது முதல் ரிவியூ எடுப்பது வரை கோலியுடன் கலந்து ஆலோசித்தார். அவர்களின் உறவு தோனி - கோலி இடையே காணப்பட்ட உறவு போல் இருந்தது.
Celebration of Virat Kohli and Rohit Sharma. pic.twitter.com/it3p7oAqZO
— Johns. (@CricCrazyJohns) February 6, 2022
பந்துவீச்சில் எப்படி எதிரணிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும். விக்கெட்க்கு பிறகு யாரை பந்துவீச அழைப்பது என்பது போன்ற முக்கிய இடங்களில் அவரின் தடம் தடுமாறவில்லை. இதேபோல், அவர் முன்னாள் கேப்டன் கோலி கொடுக்கும் ஆலோசனைகளுக்கு ஒருபோதும் முகம் சுளிக்கவில்லை. இதிலிருந்து அவரின் எதிர்கால வழிநடத்தல்களும் சிறப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரோகித் போட்டிக்கு பிறக்கான பேட்டியில், "நேர்த்தியான விளையாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களால் எப்போதும் ஒரு நேர்த்தியான வீரராக இருக்க முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாட விரும்புகிறோம். மொத்தத்தில் அனைவரின் பெரும் முயற்சியால் வெற்றி பெற்றோம். அதில் மிகவும் மகிழ்ச்சி.
தொடக்க மற்றும் இறுதி ஓவர்களில் நமது அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் ஒரு அணியாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். அணி விரும்புவதை அடைய வேண்டும் என்பதே இறுதி இலக்கு. நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அணி கோரினால், அதைச் செய்ய வேண்டும். அதற்காக நிறைய மாற வேண்டும் என்று நினைக்க வேண்டாம். வீரர்களிடம் நான் கேட்பதெல்லாம், தங்களைத் தாங்களே சவால் செய்யவேண்டும்.
சிறிது நாட்கள் நான் ஓய்வில் இருந்தேன், இரண்டு மாதங்கள் விளையாடவில்லை. ஆனால், எனக்கு வீசப்பட்ட பந்துகளை திறம்பட கையாண்டு இருந்தேன். இந்த ஆட்டத்தில் நான் உறுதியாக விளையாடினேன்." என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியா முன்னிலை
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நேற்று ஞாயிற்று கிழமை (6-ம் தேதி) அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
That's that from the 1st ODI. #TeamIndia win their 1000th ODI by 6 wickets 👏👏
Scorecard - https://t.co/6iW0JTcEMv #INDvWI pic.twitter.com/vvFz0ftGB9— BCCI (@BCCI) February 6, 2022
Yuzvendra Chahal is adjudged the Man of the Match for his bowling figures of 4/49.#INDvWI @Paytm pic.twitter.com/AvsDGfiCeJ
— BCCI (@BCCI) February 6, 2022
இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி வருகிற 9ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.