Advertisment

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி: கர்நாடகாவை சாய்த்த தமிழகம் தங்கம் வென்று அசத்தல்

தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

author-image
Martin Jeyaraj
New Update
Hockey championship 2023: TN Junior men win gold, women bag silver Tamil News

In the first edition of Hockey India Junior Men & Women South Zone Championships 2023, Tamil Nadu men secured Gold by beating Karnataka in shootout by 5-3 Tamil News

ச.மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்

Advertisment

Ramanathapuram, Hockey India Junior Men and women south zone Championship 2023 Tamil News: ‘ஹாக்கி இந்தியா’ நடத்தும் முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வேலு மாணிக்கம் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. இப்போட்டியில் கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அணிகள் பங்கேற்றன. இந்நிலையில், இப்போட்டிக்கான இறுதிப்போட்டிகள் நேற்று (ஞாயிற்றுகிழமை - மார்ச் 26) கோலாகலமாக அரங்கேறியது.

இதையும் படியுங்கள்: ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல்

த்ரில் வெற்றி

மாலை 3:30 மணிக்கு தொடங்கிய ஆடவர் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் கர்நாடக அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி முதல் கால்பகுதியில் அதன் முதல் கோலை அடித்து மிரட்டியது. பதில் கோல் அடிக்க வாய்ப்புகளை தேடி வந்த தமிழக வீரர்கள் முதல் கோலை பதிவு செய்ய போராடினர். தொடர்ந்து நடந்த 2வது கால்பகுதியில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினர்.

இதனால், தமிழ்நாடு அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தனர். 3வது கால்பகுதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க தவறிய நிலையில், 4வது கால்பகுதியில் கர்நாடக மீண்டும் கோல் அடித்து மிரட்டியது. ஏற்கனவே, இந்தக் கடைசி கால்பகுதியில் யார் வெற்றியை ருசிப்பார்? என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றி இருந்த நிலையில், கர்நாடகாவின் கடைசி நிமிட கோல் ஆட்டத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது. இறுதியில், ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் தலா 2 கோல்களை அடிக்க, போட்டி 2-2 என்ற நிலையில் சமன் ஆனாது. இதனால், பெனால்டி ஷூட்அவுட்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல்

இந்த பெனால்டி ஷூட்அவுட்-டில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்தனர். 3வது ஷூட்அவுட்-டை அடிக்க முயன்ற கர்நாடக வீரரை தமிழக வீரர் மடக்கி கோல் அடிக்க விடாமல் மறித்தார். இதனால், அது கோலாக பதிவாகவில்லை. மீண்டும் கர்நாடக அணி அடித்த 4வது பெனால்டி ஷூட்அவுட் ஃபவுல் ஆனது. 5வது மட்டும் கோலாக பதிவானது. மறுபுறம் தமிழக வீரர்கள் அடித்த 5 பெனால்டி ஷூட்அவுட்-டும் கோல்களாக பதிவாகியது. இறுதியில், தமிழ்நாடு அணி 5-3 என்ற கோல்கள் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தமிழ்நாடு அணியில் கோல்கீப்பர் நதியரசு தேர்வு செய்யப்பட்டார்.

publive-image

(Express Photo: S. Martin Jeyaraj)

பதிலடி

publive-image

(Express Photo: S. Martin Jeyaraj)

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 23ம் தேதி) நடந்த லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணி தமிழக அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதிலிருந்து மீண்டு வருவோம் எனவும், கர்நாடகாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் தமிழ்நாடு அணியின் 'பயிற்சியாளர் அரவிந்தன்' நமக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அவ்வகையில், நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி கர்நாடகாவை சாய்த்து சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது. வெற்றியை ருசித்த தமிழ்நாடு அணி தங்க பதக்கத்தை முத்தமிட்டது. தோல்வி கண்ட கர்நாடகா வெள்ளி பதக்கமும், கேரளா வெண்கல பதக்கமும் வென்றன.

இதையும் படியுங்கள்: ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த்

வெள்ளி வென்ற மகளிர் அணி

நேற்று நடந்த மற்றொரு இறுதிப்போட்டியில் கர்நாடகா - தமிழ்நாடு ஜூனியர் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே கர்நாடகாவின் கை ஓங்கி இருந்த நிலையில், ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் கர்நாடகா தமிழகத்தை வீழ்த்தியது. இதனால், கர்நாடகா அணி தங்க பதக்கம் வென்றது. தோல்வியுற்ற தமிழக அணி வெள்ளி பதக்கமும், ஆந்திர பிரதேசம் அணி வெண்கல பதக்கமும் வென்றன. மிரட்டலாக விளையாடிய கர்நாடகா அணியின் கேப்டன் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

publive-image

(Express Photo: S. Martin Jeyaraj)
publive-image

(Express Photo: S. Martin Jeyaraj)

இதையும் படியுங்கள்: ரத்தத்தின் ரத்தமே… தமிழ்நாடு ஹாக்கியில் களமாடும் அண்ணன் – தங்கை: சிறப்பு நேர்காணல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Sports Ramanathapuram Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment