Advertisment

ஐயோ பாவம்... ரன் ரேட் குழப்பத்தால் வெற்றியை கோட்டை விட்ட ஆப்கானிஸ்தான்!

இலங்கை அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்கு ரன் ரேட் குழப்பம் நிலவியது. அதனால் போட்டியில் அந்த அணி தோல்வி பெறும் சூழல் ஏற்பட்டது.

author-image
Martin Jeyaraj
New Update
Afghanistan Miss Out Asia Cup 2023 Super 4 Qualification  Explained

ஆப்கானிஸ்தான் 38.1 ஓவர்கள் வரை சூப்பர் 4 சுற்றை எட்ட 291 ரன்களை சமன் செய்து பின்னர் ஒரு சிக்ஸர் அடித்திருந்தால் அவர்கள் தகுதி பெற்று இருப்பார்கள்.

Sports  - Afghanistan vs Sri Lanka | Asia Cup, 2023: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில்நேற்று  (செவ்வாய்க்கிழமை) நடந்த கடைசி லீக் போட்டியில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதின. 

Advertisment

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 291 ரன்கள் குவித்தது. இதையடுத்து 37.1 ஓவர்களில் இலக்கை அடைந்தால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. 

ரன் ரேட் குழப்பத்தால் வெற்றியை கோட்டை விட்ட ஆப்கான்

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது ரன் ரேட் குழப்பம் நிலவியது. அதனால் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைப் பெறும் சூழல் ஏற்பட்டது. இதற்கு அவர்களின் தவறான ரன் ரேட் கணக்கீடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 32 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி ஆகியோர் முறையே 45 மற்றும் 59 ரன்களுடன் சிறப்பாக விளையாடி முக்கியமான பங்களிப்பைச் செய்தனர். அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோதும், லோ ஆடர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, நஜிபுல்லா சத்ரன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என மிரட்டினார். ஆனால், அவர் ராஜிதா வீசிய 35.4 வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  

அவர் ஆட்டமிழக்கும் முன்பு ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரஷித் கான் ஒரு பவுண்டரியைத் துரத்தி ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார்  நஜிபுல்லா சத்ரன். ஆனால் அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார். இதன் பிறகு 7 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது ரஷித் கான் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டார். அதே ஓவரில் அவர் 3 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. 

38வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் 3 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் தனஞ்சய டி சில்வா முஜீப்பை லாங்-ஆனில் கேட்ச் செய்தார். ஆனால், ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட் ஆகாமல் இருந்து இருந்தால் அவர்கள் தகுதி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். 

 ஆப்கானிஸ்தான் இப்படி செய்திருந்தால் அவர்கள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க முடியும். அதனை இங்கு பார்க்கலாம். 

ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆகாமல் 37.3 ஓவரில் 294 ரன்களை எடுத்திருந்தால், அவர்கள் 37.4 ஓவரில் 295 ரன் எடுத்திருக்கலாம். 

அல்லது, ஆப்கானிஸ்தான் அணி 38 ஓவரில் 296 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 38.1 ஓவரில் 297 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள். 

ஆப்கானிஸ்தான் 37.5 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்திருந்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளின் என்ஆர்ஆர் சமன் செய்யப்பட்டிருக்கும். சூப்பர் 4 கட்டத்திற்கு யார் செல்வார்கள் என்பதை தீர்மானிக்க அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் டாஸ் போடப்பட்டிருக்கும் 

ஆப்கானிஸ்தான் 38.1 ஓவர்கள் வரை சூப்பர் 4 சுற்றை எட்ட 291 ரன்களை சமன் செய்து பின்னர் ஒரு சிக்ஸர் அடித்திருந்தால் அவர்கள் தகுதி பெற்று இருப்பார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Sports Srilanka Afghanistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment