Advertisment

இந்தியா இன்னும் அஃபிசியலா அரை இறுதிக்கு போகல: காரணம் இலங்கை, ஆப்கானிஸ்தான்

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இன்னும் இந்தியா அரையிறுதியில் இடம் பெறுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

author-image
Martin Jeyaraj
New Update
How India Can Still Miss Out On Semi-Final Spot Despite Winning Six Matches in tamil

12 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா 2ம் இடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து (+1.232) 3ம் இடத்திலும், ஆஸ்திரேலியா (+0.970) 4ம் இடத்திலும் உள்ளன.

India Vs England | Worldcup 2023: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 

Advertisment

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா 2ம் இடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து (+1.232) 3ம் இடத்திலும், ஆஸ்திரேலியா (+0.970) 4ம் இடத்திலும் உள்ளன. 

இந்த தொடரில் இந்தியாவுக்கு மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இன்னும் இந்தியா அரையிறுதியில் இடம் பெறுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஏனெனில், 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இரு அணிகளும் இந்தியாவைப் பிடித்து 12 புள்ளிகளுடன் முடிக்கும் வாய்ப்புள்ளது. 

உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று (திங்கள்கிழமை) மோதும் நிலையில், இதில் வெற்றியை ருசிக்கும் அணிக்கு இந்தியாவை  எட்டிப் பிடிக்கும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்தால் இந்த இரு அணிக்கும் வாய்ப்புள்ளது. 

இந்தியா அதன் மீதமுள்ள 3 போட்டிகளில் இலங்கையை நவம்பர் 2ம் தேதி மும்பையில் சந்திக்கிறது. தென் ஆப்ரிக்காவை நவம்பர் 5ம் தேதி  கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது. நெதர்லாந்துடன் நவம்பர் 12ம் தேதி பெங்களூரில் மோதுகிறது. 

எந்தவொரு போட்டியிலும் இந்தியாவுக்கு இன்னும் ஒரு புள்ளி கிடைத்தால், அல்லது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டி வாஷ் அவுட் செய்யப்பட்டால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ள முடியாது என்பதை இந்த வெற்றி உறுதி செய்தும் விடும். 

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது அவர்கள் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அதிகபட்சமாக 10 புள்ளிகளை பெற முடியும். இது இந்தியாவின் தற்போதைய புள்ளிகளை விட 2 புள்ளிகள் குறைவாக இருக்கும். எனவே, இந்தியா எளிதில் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இந்தியா அரையிறுதிக்கு வரவில்லை என்றால் ஆச்சரியம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Worldcup India Vs England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment