Advertisment

IND vs AUS T20 Live Streaming: இந்த ஆப் இருக்கா? இந்தியா- ஆஸி., டி20 போட்டிகள் மொபைலில் இலவசம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் உரிமத்தை ஜியோசினிமா பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
India vs Australia T20 Series Live Streaming Free on Mobile and Telecast channels tamil

இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20 போட்டி - இன்று மோதல்

India Vs Australia: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.

Advertisment

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடரை மொபைல், லேப்டாப் மற்றும் டி.வி-யில் நேரலையில் பார்ப்பது எப்படி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் உரிமத்தை ஜியோசினிமா பெற்றுள்ளது. உங்கள் மொபைலில் ஜியோசினிமா ஆப்-பிலும், உங்கள் லேப்டாப் மற்றும் பி.சி-யில் ஜியோசினிமா இணையதள பக்கத்திலும் நேரலையில் பார்க்கலாம். மொபைல்களில் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடரை டி.வி-யில் நேரலையில் பார்ப்பது எப்படி?

ஸ்போர்ட்ஸ் 18 சேனல் (Sports18) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் போட்டிகளை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிப்பரப்புகிறது. 

போட்டி ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள வயாகாம் 18 (Viacom18) குழுமம் இரண்டு சேனல்களை கொண்டுள்ளதால், ஸ்போர்ட்ஸ் 18 -1, ஸ்போர்ட்ஸ்18 -1 எச்டி ஆகிய சேனல்களிலும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் (Colors Cineplex) சேனலிலும் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அத்துடன் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, மராத்தி, போஜ்புரி, குஜராத்தி, பங்களா, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் போட்டியை இந்த சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment