Advertisment

32 வயதில் 10 வயது பெண் குழந்தைக்கு தந்தையான நெய்மர்? மாடல் அழகி புகாரால் பரபரப்பு

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அந்தப் புகாரில் நெய்மருக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

author-image
Jayakrishnan R
New Update
Hungarian model says Neymar is her daughters father

நெய்மர் மீது ஹங்கேரிய மாடல் பாலியல் புகார் கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

32 வயதான பிரேசில் கால்பந்து ஜாம்பவான், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவர் மீது ஹங்கேரிய மாடல் அழகி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகாரில் தனது 10 வயது மகளுக்கு நெய்மர்தான் தந்தை எனக் கூறியுள்ளார். மாடல் அழகி, கேப்ரியல்லா காஸ்பர், பொலிவியாவில் நெய்மரை சந்தித்த பிறகு கருவுற்றதாக கூறியுள்ளார்.

Advertisment

இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஜாஸ்மின் ஜோ எனப் பெயரிட்டு வளர்த்துள்ளார். இது குறித்து ஹங்கேரிய ஊடக அறிக்கைகளின்படி, குழந்தையின் தந்தையை நிரூபிக்க அவர் டி.என்.ஏ பரிசோதனை கோருகிறார்.

மேலும் குழந்தையின் மாதாந்திர பராமரிப்புக்காக $32,500 பொருளாதார உதவியும் கோருகிறார்.

Neymar’s mum Nadine Goncalves dating with 22 years old toy boy Tiago Ramos

மேலும், பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் கேப்ரியல்லா காஸ்பர் என்பவர் சிவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், 'நெய்மர் அவரது குடும்பத்தினரை அணுக பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும்; அதனால், நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஹங்கேரிய மாடலான கேப்ரியல்லா காஸ்பர், பொலிவியாவின் சாண்டா குரூஸ் டி லா சியராவில் இருந்தபோது நெய்மருடன் நேரத்தை செலவிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Neymar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment